பொங்கலுக்கு வர்றோம்: வீடியோவில் கெத்து காட்டும் சிம்பு
Recommended Video

சென்னை: பொங்கலுக்கு வருகிறோம் என்று சிம்பு தெரிவித்துள்ளார்.
சுந்தர் சி. இயக்கத்தில் சிம்பு, மேகா ஆகாஷ், ரோபோ ஷங்கர் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் வந்தா ராஜாவாதான் வருவேன். லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்த படம் பொங்கலுக்கு ரிலீஸாகிறது.
சிம்பு படம் பொங்கலுக்கு வருவது உறுதியாகியுள்ளது.
சிம்பு
பொங்கலுக்கு உங்களை சந்திக்கிறேன் என்று சிம்பு கூறும் வீடியோவை மேகா ஆகாஷ் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். வந்தா ராஜாவாதான் வருவேன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

அஜித்
இந்த பொங்கலுக்கு ரஜினிகாந்தின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம் ஆகிய படங்கள் ரிலீஸாகின்றன. யார் வந்தால் என்ன இந்த பொங்கலுக்கு நாங்களும் வருகிறோம் என்று உறுதியாக சொல்கிறார் சிம்பு. இது தான் கெத்து என்கிறார்கள் ரசிகர்கள்.
மகேஷ் பாபு
ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் வந்தா ராஜாவாதான் வருவேன் ஷூட்டிங்கில் இருந்தபோது சிம்பு தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு ஆகியோர் சந்தித்துள்ளனர். அந்த சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டுள்ளது.

மணிரத்னம்
சிம்பு மீண்டும் மணிரத்னம் படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. செக்கச் சிவந்த வானத்தை போன்று இந்த படத்திலும் சிம்புவை சேர்த்து 3 ஹீரோக்களாம். அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை காத்திருப்போம்.


Click it and Unblock the Notifications











