உனக்கு நான் இருக்கேன் தம்பி.. சிம்புவை காண ஓடோடி வந்த சீமான்.. மாநாடு முதல் நாள் ஷூட்டில் பாசமழை

நடிகர் சிம்புவின் மாநாடு பட ஷூட்டிங்கிற்கு இன்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் வருகை புரிந்தார்

Recommended Video

Maanadu Shooting Started Today | STR's Mass Comeback For Maanadu | Venkat Prabhu | Suresh Kamatchi

சென்னை: நடிகர் சிம்புவின் மாநாடு பட ஷூட்டிங்கிற்கு இன்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் வருகை புரிந்தார்

நடிகர் சிம்பு நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படம் தயாராகிக் கொண்டு இருக்கிறது. இயக்குனர் பாரதிராஜா, எஸ் ஜே சூர்யா உள்ளிட்ட பிரபலங்கள் பலர் இந்த படத்தில் நடிக்கிறார்கள்.

இந்த படத்தின் ஷூட்டிங் இன்றுதான் தொடங்கியது. பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் படத்தின் ஷூட்டிங் இன்று காலை பூஜையுடன் தொடங்கியது.

மாநாடு

மாநாடு

இந்த நிலையில் சிம்புவின் மாநாடு பட ஷூட்டிங்கிற்கு இன்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் வருகை புரிந்தார். படத்தின் ஷூட்டிங் நடக்கும் போதே அங்கு சீமான் வருகை புரிந்தார். முழு வெள்ளை உடையில், சீமான் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வருகை புரிந்தார்.

படம் எப்படி

படம் எப்படி

இதனால் படப்பிடிப்பு தளம் பெரிய அளவில் ஆரவாரமானது. சீமான் ரசிகர்கள், சிம்பு ரசிகர்கள் பலரும் அங்கே கூடியதால், ஷூட்டிங் ஸ்பாட்டே கொண்டாட்டமானது.இதையடுத்து சிம்புவும், சீமானும் நீண்ட நேரம் அங்கே உரையாடினார்கள். பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்கள்.

சிம்பு உண்மை

சிம்பு உண்மை

சிம்புதான் உண்மையான சூப்பர் ஸ்டார் என்று சீமான் சில நாட்களுக்கு முன் குறிப்பிட்டு இருந்தார். சிம்பு தமிழர். அவருக்கு பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அவரின் படங்கள் எல்லாம் பெரிய அளவில் வரவேற்பை பெறுகிறது என்று சீமான் சில நாட்களுக்கு முன் குறிப்பிட்டு இருந்தார்.

சீமான் எப்படி

சீமான் எப்படி

அதேபோல் சீமான் இயக்கத்தில் சிம்பு விரைவில் நடிக்க வாய்ப்புள்ளது. இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் படப்பிடிப்பு இதற்காக துவங்கும் என்கிறார்கள். தமிழர் அரசியலை மையமாக வைத்து இந்த படம் இருக்கும் என்று கூறுகிறார்கள். சீமான் நீண்ட நாட்களுக்கு பின் எடுக்கும் படமாக இது இருக்க போகிறது. பெரிய பட்ஜெட்டில் இந்த படம் தயாராகும் என்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X