“தனுஷும், செல்வராகவனும் சின்ன வயசுல இப்படியெல்லாம் கஷ்டப்பட்டாங்களா”.. ரசிகர்கள் வேதனை

ரசிகர்கள் தான் தனது நண்பர்கள் என இயக்குனர் செல்வராகவன் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Recommended Video

புதுப்பேட்டை 2 கேட்டதுக்கு , ஆயிரத்தில் ஒருவன் 2 கொடுப்பேன் : செல்வராகவன் வைரல் வீடியோ

சென்னை: இயக்குனர் செல்வராகவன் தனது ரசிகர்கள் பற்றி உருக்கமான பதிவு ஒன்றை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

காதல்கொண்டேன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். 7ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன் என ஹிட் படங்களை கொடுத்தவர்.

Selvaraghavans emotional tweet

தமிழ் சினிமாவில் செல்வராகவனுக்கு என தனியிடம் இருக்கிறது. தற்போது இவர் சூர்யா நடிப்பில் என்ஜிகே படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ரசிகர்கள் தான் தனது நண்பர்கள் என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டிவிட்டரில் அவர் கூறியிருப்பதாகவது, " கொடூரமான வறுமையில் பிறந்து வளர்ந்தவன் நான். இருவேளை உண்டால் அரிது. அண்டை வீட்டுக்காரர்களின் அன்பு காப்பாற்றியது. ஆயினும் சமூகம் கேலி செய்யும். நீ எல்லாம் என்ன சாதித்துக் கிழிக்கப் போகிறாய் என. எனக்கு தோள் கொடுத்து என் ரசிகர்கள் சாதித்தனர். அதனால்தான் அவர்கள் மட்டுமே என் நண்பர்கள்" என இவ்வாறு தெரிவித்துள்ளார்.

செல்வராகவனின் இந்தப் பதிவால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவருக்கு ஆதரவாக இருப்பதாக மகிழ்ச்சியுடன் அவர்கள் பதில் அளித்து வருகின்றனர். ஆன போதும், அவர் ஏன் தற்போது இப்படியொரு பதிவை வெளியிட்டுள்ளார் என்ற குழப்பத்தை இந்தப் பதிவு ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X