செஞ்சது தனுஷ்.. மாட்டியது நான்.. போலீஸ்வரைக்கும் போய்டுச்சு.. ஓபனாக பேசிய செல்வராகவன்

சென்னை: செல்வராகவன் இயக்கத்தில் கடைசியாக நானே வருவேன் திரைப்படம் வெளியானது. படத்தை அவர் இயக்கியிருந்தாலும் கதையை தனுஷ்தான் எழுதியிருந்தார். அந்தப் படம் தோல்வியை சந்தித்தது. அடுத்ததாக செல்வா இப்போது மென்டல் மனதில் உள்ளிட்ட படங்களை இயக்கிவருகிறார். மேலும் ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தை இயக்கும் முயற்சிகளிலும் அவர் இருக்கிறார். இப்படிப்பட்ட சூழலில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.

துள்ளுவதோ இளமை படத்தில் இயக்குநராக அறிமுகமான செல்வராகவனுக்கு அந்தப் படம் ஓரளவுதான் வெற்றியை கொடுத்தது. அடுத்ததாக அவரது கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில் வெளியான காதல் கொண்டேன் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அந்தப் படம்தான் தனுஷுக்குள் ஒரு சிறந்த நடிகர் இருக்கிறார் என்பதையும், செல்வராகவன் மிகச்சிறந்த இயக்குநர் என்பதையும் வெளிச்சம் போட்டு காண்பித்தது. இன்றுவரை அந்தப் படம் பலரால் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.

செல்வாவுக்கு மொத்தம் இரண்டு திருமணங்கள்: அதனைத் தொடர்ந்து அவர் இயக்கிய புதுப்பேட்டை, மயக்கம் என்ன, 7ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன் என வரிசையாக ஹிட்டடித்தன. அதனால் தவிர்க்க முடியாத இயக்குநராக மாறினார். அப்படிப்பட்ட நிலையில் சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்துகொண்டு அவரை விவாகரத்து செய்த செல்வராகவன்; தன்னிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த கீதாஞ்சலியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவருக்குமான திருமணம் அன்போடு சென்றுகொண்டிருக்கிறது.

Selvaraghavan says he was stuck because of the lyrics written by Dhanush

நடிப்பில் கவனம் செலுத்தும் செல்வா: அப்படி அவர் பீஸ்ட், பகாசூரன், சாணிக்காயிதம், மார்க் ஆண்டனி, ராயன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். நடிப்பு மட்டுமின்றி ஆயிரத்தில் ஒருவன் 2, புதுப்பேட்டை 2 ஆகிய படங்களையும் அவர் இயக்கவிருக்கிறார். கடைசியாக தனுஷ் எழுதிய கதையை நானே வருவேன் என்ற பெயரில் இயக்கினார். படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. இருந்தாலும் செல்வராகவன் ஒரு இயக்குநராக கம்பேக் கொடுப்பார் என்று அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

செல்வாவின் ஸ்பெஷல் என்ன?: செல்வராகவனின் இயக்கத்தை பொறுத்தவரை அவரது பெண் கதாபாத்திரங்கள் எப்போதும் ஸ்ட்ராங்காக எழுதப்படும். அந்தப் பெண் ஹீரோவை வழிநடத்துபவராகவே இருப்பார். 7ஜி அனிதா, மயக்கம் என்ன யாமினி போன்ற கேரக்டர்களை அதற்கு உதாரணமாக சொல்லலாம். அதேசமயம் அப்படி அவர் உருவாக்கும் கேரக்டர்கள் விமர்சனத்தையும் சந்தித்தது உண்டு. அதேபோல் மயக்கம் என்ன திரைப்படத்தில் அடிடா அவள உதைடா அவள என்ற பாடல் வரிகளும் மிகப்பெரிய விமர்சனத்தை பெற்றது நினைவுகூரத்தக்கது.

செல்வராகவன் பேட்டி: அந்தப் பாடல் வரிகளை தனுஷ் எழுதியிருந்தார். இந்நிலையில் சமீபத்தி செல்வா அளித்த பேட்டியில் அந்தப் பாடல் வரிகள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "அந்தப் பாடல் வரிகளை எழுதியது தனுஷ். ஆனால் மாட்டியது நான். ஒரு பெண்ணை முழுவதுமாக வெறுத்தால்தான் அந்தப் பெண்ணிலிருந்து நம்மால் வெளியே வர முடியும். அப்படி ஒரு எண்ணத்தில்தான் அந்தப் பாடல் வரிகளை ஓகே செய்தோம். ஆனால் அது வேறு மாதிரி திரும்பிவிட்டது. அதுமட்டுமின்றி போலீஸ்வரைக்கும் கொண்டு போய்விட்டது" என்றார். செல்வா இப்போது மென்டல் மனதில் என்ற படத்தை இயக்கிவருகிறார். அவரது இந்தப் பேட்டி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக ஆரம்பித்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X