என் மகன் அவங்க சித்தப்பாவோட பெரிய ஃபேன்.. தம்பி தனுஷுக்கு பெரிய ஐஸ் வைக்கும் அண்ணன் செல்வராகவன்!

சென்னை: அடுத்த ஆண்டு வெற்றிமாறன் உடன் இணைந்து வடசென்னை 2 திரைப்படம் தொடங்கும் என சமீபத்தில் நடைபெற்ற குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் பேசியிருந்தார். சில ஆண்டுகளுக்கு முன்னதாக இதே போல அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் புதுபேட்டை 2 மற்றும் ஆயிரத்தில் ஒருவன் 2 உள்ளிட்ட படங்களில் நடிப்பேன் என உறுதியளித்தார்.

ஆனால், நானே வருவேன் திரைப்படம் 2022ம் ஆண்டு வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், அதன் பின்னர் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் இணைந்து நடிக்கும் படம் இன்னமும் ஆரம்பமாகவில்லை.

Selvaraghavan says his son his a big fan of Dhanush
Photo Credit:

நடிகர் தனுஷ் தொடர்ந்து பல இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில், தனுஷ் குறித்து செல்வராகவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அண்ணனால் உயர்ந்த தனுஷ்: அப்பா கஸ்தூரி ராஜாவே கடனால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், குடும்பத்தையே காப்பாற்ற செல்வராகவன் திரைக்கதையில் உருவான படம் தான் துள்ளுவதோ இளமை. அந்த படத்தைத் தொடர்ந்து செல்வராகவன் தனுஷை வைத்து இயக்கிய காதல் கொண்டேன் படமும் வெற்றிப் படமாக மாறியது. புதுப்பேட்டை படமெல்லாம் கேங்ஸ்டர் படங்களுக்கு முன்னோடி என சொல்லப்படும் அளவுக்கு உள்ளது. ஆயிரத்தில் ஒருவன் படம் சறுக்கத் தொடங்கிய நிலையில், மயக்கம் என்ன, நானே வருவேன் என செல்வராகவன் இயக்கிய படங்கள் எல்லாம் தொடர்ந்து சொதப்பின.

சித்தப்பாவோட பெரிய ஃபேன்: இயக்குநர் செல்வராகவன் அடுத்ததாக 7ஜி ரெயின்போ காலனி 2 படத்தை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அந்த படம் குறித்த அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகவில்லை. சமீபத்தில், மோகன்லாலின் துடரும் படத்தை பார்த்துவிட்டு பாராட்டியிருந்தார். இந்நிலையில், தற்போது, டிவியில் ஓடும் தனுஷ் படத்தை தனது கடைக்குட்டி மகன் பார்க்கும் புகைப்படத்தை பகிர்ந்து என்னோட மகன் பெரிய சித்தப்பா ஃபேன் என பதிவிட்டுள்ளார். செல்வரகாவனின் போஸ்ட் தனுஷ் ரசிகர்களை ரொம்பவே அட்ராக்ட் செய்து வருகிறது.

சீக்கிரம் ஆயிரத்தில் ஒருவன் 2 வரணும்: அண்ணன் செல்வராகவன் உடன் இணைந்து நானே வருவேன் படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது தனுஷிடம் ரசிகர்கள் புதுப்பேட்டை 2 மற்றும் ஆயிரத்தில் ஒருவன் 2 அப்டேட் கேட்டார்கள். அப்போது, 2021ம் ஆண்டு ஆயிரத்தில் ஒருவன் 2 படம் வரும் என டைட்டில் போஸ்டருடன் ட்வீட் ஒன்றை வெளியிட்டார். ஆனால், 2025ம் ஆண்டு ஆகியும் அந்த படம் தொடங்கப்படவில்லை. தனுஷ் கை வசம் தற்போது இருக்கும் 8 படங்கள் முடியவே இன்னும் 5 ஆண்டுகள் ஆகி விடும் என்கின்றனர். இதுகுறித்த கேள்விக்கு பதில் அளித்த செல்வராகவன், ஆயிரத்தில் ஒருவன் 2வில் கார்த்தியும் சேர்ந்து நடிக்க வேண்டி இருப்பதால் தாமதம் ஆகிறது என்றார்.

பெரிய ஐஸ்: அண்ணனுக்குப் போட்டியாக தனுஷே இயக்குநராக மாறி தொடர்ந்து பல படங்களை இயக்கி வருகிறார். ப. பாண்டி படத்தில் ஆரம்பித்து, ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம், இட்லி கடை உள்ளிட்ட படங்களை இயக்கி வருகிறார். இந்நிலையில், தனுஷை வைத்து ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தை ஆரம்பித்து விட வேண்டும் என்பதற்காக இப்படியெல்லாம் ஐஸ் வைக்கிறார் செல்வராகவன் என சில நெட்டிசன்கள் கிண்டலாக கமெண்ட் போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X