கவனமாக இருங்கள்... எச்சரிக்கும் இயக்குநர் செல்வராகவன்... நெட்டிசன்ஸ் ரியாக்ஷன பாருங்க!

சென்னை: இயக்குநர் செல்வராகவன் பதிவிட்டுள்ள டிவிட்டை பார்த்த நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

இயக்குநர் செல்வராகவன் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருகிறார். தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

கீர்த்தி சுரேஷுடன் சாணிக்காயிதம் படத்தில் நடித்து வரும் செல்வராகவன், தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் விஜய்யின் பீஸ்ட் படத்திலும் நடித்து வருகிறார்.

தனுஷை இயக்கும் செல்வராகவன்

தனுஷை இயக்கும் செல்வராகவன்

பீஸ்ட் படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. கடைசியாக அவரது இயக்கத்தில் நெஞ்சம் மறப்பதில்லை படம் வெளியானது. தற்போது ராயன் என்ற படத்தை இயக்கி வருகிறார். அடுத்து நடிகர் தனுஷை வைத்து நானே வருவேன் படத்தை இயக்கவுள்ளார் செல்வராகவன்.

தனிமையில் இருப்பதே பேரின்பம்

தனிமையில் இருப்பதே பேரின்பம்

இந்நிலையில் இயக்குநர் செல்வராகவன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு டிவிட்டை பதிவிட்டிருந்தார். அதாவது இன்னொருவர் இருந்தால்தான் நிம்மதி என்று ஒரு பொழுதும் நினைத்து விடாதீர்கள். உண்மையில் அதைப் போல் ஒரு இம்சை எதுவும் இல்லை. தனிமையில் இருப்பதே பேரின்பம். பெரும் நிம்மதி என குறிப்பிட்டிருந்தார்.

கவனமாக இருங்கள்!

கவனமாக இருங்கள்!

இதனை பார்த்த ரசிகர்கள் இரண்டு திருமணங்கள் செய்யும் வரை அது தெரியவில்லையா என கேட்டிருந்தனர். இந்நிலையில் இன்றும் ஒரு பதிவை ஷேர் செய்துள்ளார் இயக்குநர் செல்வராகவன். அதாவது, கவனமாக இருங்கள் ! எதெல்லாம் உலகம் உங்களின் குறைகளாக சொல்கிறதோ அதுவே நிறைகளாக இருக்க கூடும் ! என குறிப்பிட்டுள்ளார்.

அடி ரொம்ப பலமோ

அடி ரொம்ப பலமோ

இதனை பார்த்த நெட்டிசன்கள், இயக்குநர் செல்வராகவனை கிண்டலடித்து வருகின்றனர். தலைவனுக்கு அடி ரொம்ப பலமோ என்று நக்கலாய் டிவிட்டி வருகின்றனர் நெட்டிசன்கள். அதே நேரத்தில் நீங்கள் சொல்வது சரிதான் என்று ஆதரவும் எழுந்து வருகிறது.

தாக்கம் நிறைந்த படங்கள்

தாக்கம் நிறைந்த படங்கள்

செல்வராகவனின் டிவிட்டை பார்த்த இந்த நெட்டிசன், செல்வராகவன் கதைக்களங்கள் ஏதோ ஒருவகையில் மனிதர்களின் வாழ்க்கையில் இணைந்தே இருக்கிறது. குறிப்பாக செவன் ஜி புதுப்பேட்டை போன்றவை மீண்டும் அத்தகைய தாக்கம் நிறைந்த படங்கள் உங்களிடம் எதிர்பார்க்கிறோம் அதுவும் வெற்றி படங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X