மீண்டும் சூடுபிடிக்கும் நடிகர் அர்ஜூன் மீதான பாலியல் புகார்.. தயாரிப்பாளர், இயக்குநருக்கு நோட்டீஸ்!
சென்னை: நடிகர் அர்ஜூன் மீதான பாலியல் வழக்கில் தயாரிப்பாளர், இயக்குனர் விசாரணைக்கு ஆஜராக போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
கன்னட படத்தின் மூலம் சினிமா உலகுக்கு அறிமுகமானவர் நடிகர் அர்ஜூன். தமிழில் 1984 ஆம் ஆண்டு வெளியான நன்றி படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார்.
தொடர்ந்து தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக 150 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் நடிகர் அர்ஜூன்.

ஃபிரண்ட்ஷிப் படத்தில் அர்ஜூன்
தனது பெரும்பாலான படங்களில் போலீஸ் அதிகாரி, சிபிஐ அதிகாரி, ராணுவ வீரர் போன்ற கேரக்டர்களிலேயே அதிகம் நடித்துள்ளார் அர்ஜூன். அவரது நடிப்பில் வெளியான ஜெய்ஹிந்த், செங்கோட்டை போன்ற படங்கள் சக்கை போடு போட்டன. அர்ஜூன் தற்போது தமிழில் ஃபிரண்ட்ஷிப், மேதாவி, விருன்னு ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

ஜீ தமிழில் சர்வைவர்
விருன்னு படம் மலையாள மொழியிலும் உருவாகி வருகிறது. இதேபோல் தெலுங்கில் கில்லாடி என்ற படத்திலும் நடித்து வருகிறார். மேலும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சர்வைவர் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார் அர்ஜூன்.

அர்ஜூன் மீது பாலியல் புகார்
இந்நிலையில் நடிகர் அர்ஜூன் கன்னடத்தில் நடித்திருந்த விஸ்மய என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக சுருதி ஹரிகரன் நடித்திருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் அர்ஜூன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்திருந்ததாக கடந்த 2018-ம் ஆண்டு பெங்களூரு கப்பன் பார்க் போலீஸ் நிலையத்தில் நடிகை சுருதி ஹரிகரன் புகார் அளித்திருந்தார்.

இயக்குநர் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ்
ஆனால் அவர்கள் ஆஜராகாமல் இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், நடிகர் அர்ஜூன் மீதான பாலியல் வழக்கில் தயாரிப்பாளர் ஜெயராம், இயக்குனர் அருண், அரவிந்த் உள்ளிட்டோர் விசாரணைக்கு ஆஜராகும்படி போலீஸார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இவர்களில் இயக்குநர் அருண் விசாரணைக்கு ஆஜராக போலீசாரிடம் கால அவகாசம் கேட்டுள்ளதாக தெரிகிறது.

மீண்டும் தூசு தட்டப்படும் வழக்கு
மற்றவர்கள் விரைவில் ஆஜராக உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். நடிகர் அர்ஜூன் மீதான பாலியல் புகாரை கப்பன் பார்க் போலீசார் மீண்டும் தூசு தட்டியிருப்பது சினி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் அர்ஜூன் சமீபத்தில் சென்னை போரூர் அருகே ஆஞ்சநேயர் கோவிலை கட்டி கும்பாபிஷேகம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











