ஓவர் கான்ஃபிடன்ஸ் உடம்புக்கு ஆகாது பாஸ்… நச்சென்று சொன்ன நடிகர் ஷாருக்கான்!
அதீத நம்பிக்கை தோல்வியை விட மோசமானது என ஷாருக்கான் தெரிவித்துள்ளார்
மும்பை: அதீத நம்பிக்கை தோல்யை விட மோசமானது என நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் சமீபத்தில் தன்னுடைய 53வது பிறந்த நாளைக் கொண்டாடினார். சமீபத்திய நிகழ்வு ஒன்றில் பேசிய அவர் அதீத நம்பிக்கை குறித்த முக்கிய விஷயத்தை பகிர்ந்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு என்னுடைய மகன் ஆப்ராமிடம் அருகில் உட்கார் எனக் கூறினேன். அவன் என்னுடன் இருக்க விரும்பாமல் விலகிச் சென்றான். குழந்தைகளோடு அதிக நேரம் செலவிடாததால் நான் ஒரு நல்ல அப்பா இல்லை எனத் தோன்றியது. நான் தோற்றுவிட்டதாக உணர்ந்தேன்.
ஆனால், என் மனைவி வந்து, நான் நினைப்பது தவறு, என்னைப் போலவேதான் என் குழந்தைகளும் நினைப்பார்கள் எனக் கூறினார். அதனால் சொல்கிறேன் நீங்கள் வளர்வதற்கு அதீத நம்பிக்கையை கைவிட வேண்டும். அதீத நம்பிக்கையோடு இருப்பதென்பது தோல்வியடைந்தவனின் மன நிலையை விட மோசமானது என்றார்.
ஷாருக்கான் தற்போது ஸீரோ திரைப்பட ரிலீஸூக்காக காத்திருக்கிறார். ஆனந்த் எல்.ராய் இயக்கியுள்ள இப்படத்தில் அபூர்வ சகோதர்கள் அப்பு கமலைவிட குள்ளமாக நடித்துள்ளார். பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் டிசம்பர் 21 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.


Click it and Unblock the Notifications











