அடேங்கப்பா! ஷாருக்கான், அஜய் தேவ்கன் கட்டிப்பிடித்த வீடியோ ரூ. 1 கோடிக்கு விற்பனையா?

By Siva

மும்பை: நடிகர்கள் ஷாருக்கானும், அஜய் தேவ்கனும் கட்டிப்பிடித்த வீடியோவை ரூ. 1 கோடிக்கு விற்பனை செய்துவிடுவேன் என்று இயக்குனர் ரோஹித் ஷெட்டி தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டின் மசாலா பட மன்னன் ரோஹித் ஷெட்டி. அவருக்கு பிடித்த ஹீரோ என்றே அஜய் தேவ்கனை அதாங்க நடிகை கஜோலின் கணவரை கூறலாம். இந்நிலையில் ரோஹித் அஜய்யை வைத்து சூர்யா நடித்த சிங்கம் 2 படத்தின் இந்தி ரீமேக்கான் சிங்ஹம் ரிட்டர்ன்ஸை எடுத்து வருகிறார்.

சிங்ஹம் ரிட்டர்ன்ஸ் படப்பிடிப்பில் தான் அந்த அதிசயம் நடந்தது.

ஷாருக்கான்

ஷாருக்கான்

நடிகர் ஷாருக்கானுக்கும், அஜய் தேவ்கனுக்கும் ஆகவே ஆகாது. காரணம் 2012ம் ஆண்டு ஷாருக்கின் ஜப் தக் ஹை ஜான் மற்றும் அஜய்யின் சன் ஆப் சர்தார் ஆகிய படங்கள் ஒரே நாளில் ரிலீஸாகின. அப்போது ஷாருக்கின் படத் தயாரிப்பாளரான யஷ்ராஜ் பிலிம்ஸ் அதிக தியேட்டர்களை முடக்கியதாக தேவ்கன் புகார் தெரிவித்தார். அப்போது தான் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டது.

படப்பிடிப்பு

படப்பிடிப்பு

இப்படி எதிரிகளாக இருந்து வந்தார்கள் ஷாருக்கும், அஜய் தேவ்கனும். இந்நிலையில் தான் ஷாருக் திடீர் என்று சிங்ஹம் ரிட்டர்ன்ஸ் படப்பிடிப்புக்கு வந்துள்ளார்.

அதிசயம்

அதிசயம்

ஷாருக்கான் படப்பிடிப்புக்கு வந்தது அதிசயம் அல்ல. அங்கு நடித்துக் கொண்டிருந்த அஜய் தேவ்கனை இருக்கமாக கட்டிப்பிடித்தது தான் அங்கிருந்தவர்கள் அவர்களின் கண்ணையே நம்ப முடியாமல் செய்தது. படப்பிடிப்பில் இருந்தவர்கள் தங்களை தானே கிள்ளிப் பார்த்துக் கொண்டு இது உண்மை தான் என்று கூறிக் கொண்டனர்.

பேச்சு

பேச்சு

ஷாருக்கும், அஜய்யும் கட்டிப்பிடித்ததோடு மட்டும் அல்லாமல் ஏதோ நெருங்கிய நண்பர்கள் போன்று அரட்டையும் அடித்துள்ளனர்.

ரூ.1 கோடி

ரூ.1 கோடி

ஷாருக்கும், அஜய்யும் கட்டிபிடித்ததை வீடியோ எடுத்துள்ளேன். அதை ரூ.1 கோடிக்கு விற்றுவிடுவேன் என்று கூறி சிரித்தார் ரோஹித்.

விளம்பரம்

விளம்பரம்

இந்த கட்டிப்பிடி வீடியோவை சிங்ஹம் படத்தில் பயன்படுத்தி ரோஹித் விளம்பரம் தேட உள்ளதாக பாலிவுட்டில் பேசப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X