இட்லி, வடை ராம்சரண்.. இங்க வந்து ஆட்டத்தை போடு.. ராம்சரணை இப்படி அசிங்கப்படுத்திட்டாரே ஷாருக்கான்!
ஜாம் நகர்: முகேஷ் அம்பானி மகன் ஆனந்த் அம்பானி திருமண நிகழ்ச்சியில் ஷாருக் கான், அமீர்கான் மற்றும் சல்மான்கான் மூவரும் மேடையில் ஏறி நாட்டுக்கூத்து பாடலின் இந்தி வெர்ஷனுக்கு நடனமாடினர். பாலிவுட் நடிகர் ஷாருக்கான் அப்போது நடிகர் ராம்சரண் மேடைக்கு வருமாறு பயன்படுத்திய வார்த்தை சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தென்னிந்திய நடிகர்களான ராம்சரணை இட்லி வடை ராம் சரண் என ஷாருக்கான் குறிப்பிட்டது ராம்சரண் ரசிகர்களை கடும் அதிருப்தியில் ஆழ்த்தி உள்ளது. அனைத்துக்கும் மேலாக ராம்சரணின் மனைவி உபாசனாவின் மேக்கப் ஆர்டிஸ்ட் போட்ட பதிவு தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது.

ஆஸ்கர் வரை சென்ற ராம்சரண்: இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்த ராம்சரண் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்கர் விருது விழாவில் கலந்து கொண்டார். மேலும், ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இணைந்து நடனமாடிய நாட்டுக்கூத்து பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டு இயக்குநர்களே ராம் சரணை வைத்து படம் எடுக்க வேண்டும் என்கிற விருப்பத்தை தெரிவித்து இருந்தனர்.
அயோத்தி கோயில் திறப்பு விழாவில் ராம்சரண்: பிரபாஸ் போல தானும் பாலிவுட்டில் பெரிய நடிகராக வரவேண்டும் என்கிற ஆசை ராம் சரணுக்கு ஏற்பட்டுள்ளதா என்று தெரியவில்லை. தனது தந்தை சிரஞ்சீவியுடன் இணைந்து கொண்டு அயோத்தியில் திறக்கப்பட்ட ராமர் கோயில் விழாவுக்கு சென்று இருந்தார். இந்நிலையில் அடுத்ததாக அம்பானி வீட்டு திருமண விழாவிலும் ராம்சரண் தனது மனைவி உபாசனாவுடன் பங்கேற்றுள்ளார்.

ஆனந்த் அம்பானி ப்ரி வெட்டிங்: தெலுங்கு திரையுலகில் இருந்து நாகார்ஜுனா குடும்பம், பிரபாஸ், அல்லு அர்ஜுன் உள்ளிட்ட யாரையும் அழைக்கவில்லை. மேலும், மலையாள திரையுலகம் மற்றும் கன்னட திரையுலகத்தில் இருந்து பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை. தெலுங்கு திரையுலகில் இருந்து ராம்சரண் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார்.
மேடையில் நடனமாடிய மூன்று கான்கள்: ஷாருக்கான், சல்மான் கான் மற்றும் அமீர் கான் மூவரும் முகேஷ் அம்பானியுடன் இணைந்து மேடையில் நாட்டுக் கூத்து பாடலில் இந்தி வெர்ஷனுக்கு நடனமாடினர். அப்போது, ராம்சரணையும் அழைத்து ஆட வைக்கலாமே என ஷாருக்கான் நினைத்து அழைத்தது தான் தற்போது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

இட்லி, வடை ராம் சரண்: தென்னிந்தியர்களை குறிப்பாக இட்லி, சாம்பார் என வட இந்தியர்கள் அழைத்துக் கொண்டிருக்கும் நிலையில், ஷாருக்கானும் அதே போல இட்லி, வடை ராம் சரண் என அழைத்து மேடையில் ஏற்றி நடனமாட வைத்தார். ஷாருக்கான் ராம் சரணை அப்படி அழைத்தது தவறு என சோஷியல் மீடியாவில் ராம் சரண் ரசிகர்கள் ஷாருக்கானை திட்டித் தீர்த்து வருகின்றனர்.
பற்ற வைத்த மேக்கப் ஆர்ட்டிஸ்ட்: ஆரம்பத்தில், இதுகுறித்து ரசிகர்களுக்கு தெரியாமல் இருந்து வந்த நிலையில், ராம்சரண் மனைவி உபாசனாவின் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஜெபா ஹாசன் "நான் ஷாருக்கானின் சிறந்த ரசிகை.. ஆனால், ராம்சரணை இப்படி அவர் அசிங்கப்படுத்தியது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. அதனால், அந்த நிகழ்ச்சிக்கு பிறகு அங்கிருந்து வெளியேறிவிட்டேன் என பதிவிட்டு இருந்தார். ஆனால், அதன் பின்னர் அவர் அதை டெலிட் செய்து விட்டதாக கூறப்படுகிறது. அவரது இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஸ்க்ரீன் ஷாட்டை ஷேர் செய்து ராம்சரண் ரசிகர்கள் ஷாருக்கானை ரேசிஸ்ட் என திட்டித் தீர்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











