ஷாருக் இல்லாத பாலிவுட்....வீ மிஸ் யூ ஷாருக்... ட்ரெண்ட்டாக்கும் ரசிகர்கள்

மும்பை : கடந்த 2018ல் ஷாருக் நடிப்பில் ஜீரோ படம் ரிலீசானது. அதையடுத்து அவரது எந்த படமும் ரிலீசாகவில்லை.

தன்னுடைய மகன் மீதான வழக்கிற்கு பிறகு ஷாருக் சமூக வலைதளங்களிலும் எந்த பதிவையும் இடவில்லை.

இதனால் ஷாருக் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். ஷாருக் இல்லாத பாலிவுட், பாலிவுட்டாகவே இல்லை என்று அவர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

நடிகர் ஷாருக்கான்

நடிகர் ஷாருக்கான்

நடிகர் ஷாருக்கான் பாலிவுட் பாட்ஷா என்றும் பாலிவுட் கிங் எனவும் தன்னுடைய ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகிறார். அவரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதேபோல அவரது படங்களின் ரிலீசும் சிறப்பான கொண்டாட்டங்களுக்கு உள்ளாகி வருகின்றன.

அடுத்தடுத்த படங்களில் நடிப்பு

அடுத்தடுத்த படங்களில் நடிப்பு

ஆனால் கொரோனா உள்ளிட்ட காரணங்களால் கடந்த 2018ல் அவரது ஜீரோ படம் ரிலீசான பின்பு அவரது அடுத்த படம் ரிலீசாக வில்லை. தற்போது அட்லி இயக்கத்தில் ஒரு படம் மற்றும் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பதான் படங்களில் நடித்து வருகிறார் ஷாருக். மேலும் சல்மானின் டைகர் 3 படத்திலும் கேமியோ ரோலில் நடித்து வருகிறார்.

 வீ மிஸ் யூ ஷாருக் ஹேஷ்டேக்

வீ மிஸ் யூ ஷாருக் ஹேஷ்டேக்

இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக அவரது எந்தப்படமும் ரிலீசாகாததை சுட்டிக் காட்டி அவரது ரசிகர்கள் வீ மிஸ் யூ ஷாருக் என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்டாக்கி வருகின்றனர். மேலும் தனது மகனின் கைதையடுத்து ஷாருக் சமூக வலைதளங்களில் இருந்தும் விலகி இருக்கிறார்.

ஷாருக் மகன் கைது

ஷாருக் மகன் கைது

ஷாருக்கின் மகன் ஆர்யன் கான் மற்றும் அவரது நண்பர் இருவரும் போதை பொருள் தொடர்பு வழக்கில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு ஆர்தர் சாலையில் உள்ள சிறையில் ஒருமாத காலம் அடைக்கப்பட்டு வெளியில் வந்தனர். இதனால் ஷாருக்கான் கடுமையான மன உளைச்சலில் காணப்பட்டார்.

பதிவிடாத ஷாருக்

பதிவிடாத ஷாருக்

இதையடுத்து கடந்த 4 மாதங்களாக அவர் சமூக வலைதளங்களிலும் எந்த பதிவையும் இடாமல் விலகியுள்ளார். இந்நிலையில் வீ மிஸ் யூ ஷாருக் என்ற ஹாஸ்டாக்கை ட்ரெண்டாக்கிவரும் அவரது ரசிகர்கள் தொடர்ந்து அவரது படங்களின் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் அவரது நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

ரசிகர்கள் வருத்தம்

ரசிகர்கள் வருத்தம்

மேலும் அவர் விரைவில் செயல்பட துவங்குவார் என்று நம்புவதாகவும், ஷாருக் இல்லாத பாலிவுட், பாலிவுட்டாகவே இல்லை என்றும் அவர்கள் தெரிவித்து வருகின்றனர். குறைந்தபட்சம் ட்விட்டரில் ஆஸ்க் ஷாருக் என்ற கேள்வி பதில் நிகழ்ச்சியையாவது அவர் நடத்த வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X