கூலி அமீர்கான் மாதிரி ஆக்கிட மாட்டீங்களே.. ஜெயிலர் 2வில் ஷாருக்கான்.. ரொம்ப உஷார் தான்!
சென்னை: நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் இப்போது ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படத்தில் நடித்துவருகிறார். இதன் இறுதிக்கட்ட ஷூட்டிங் மும்முரமாக நடந்துவருகிறது. முதல் பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் தவிர்த்து வித்யா பாலான், பாலைய்யா உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் பாலிவுட் பாட்ஷா என கொண்டாடப்படும் ஷாருக்கானும் முக்கியமான ரோலில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
பீஸ்ட் படத்தின் தோல்வி நெல்சன் திலீப்குமாரை ரொம்பவே படுத்திவிட்டது. அதற்கு முன்னர் அவர் இயக்கிய இரண்டு படங்களுமே மெகா ஹிட்டுகள் என்பதையெல்லாம் மறந்து அநியாயத்துக்கு அவரை ரோஸ்ட் செய்துவிட்டார்கள் ரசிகர்கள். அப்படிப்பட்ட சூழலில்தான் ரஜினியை வைத்து ஜெயிலர் படத்தை இயக்கினார். பீஸ்ட் படத்தின் ரிசல்ட்தான் இதற்கும் கிடைக்கும் என்றெல்லாம் அறிவிப்பு வந்தபோதே பலரும் கிண்டல் செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தரமான ஹிட்: பீஸ்ட் படத்தை வைத்து தன்னை கிண்டல் செய்தவர்களுக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்து உழைத்த நெல்சன்; அதற்கான பலனை அனுபவித்தார். படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. உலகம் முழுவதும் 700 கோடி ரூபாய் வரை வசூலித்ததாக தயாரிப்பு தரப்பு அறிவித்தது. மேலும் ரஜினி, நெல்சன், அனிருத் ஆகியோருக்கு சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் சொகுசு காரையும் பரிசாக வழங்கினார்.

ஜெயிலர் 2: அப்படத்தின் வெற்றிக்கு பிறகு அதீத நம்பிக்கையுடன் ரஜினி நடித்த கூலி குழியில் விழுந்ததால்; இப்போது பெரிய ஆவலுடன் ஜெயிலர் 2வில் நடித்துவருகிறார் ரஜினி. நெல்சனும் ஜெயிலர் முதல் பாகத்தில் பெற்ற வெற்றியை இதில் தக்க வைக்க வேண்டும் என்ற பொறுப்புடன் வேலை செய்துவருகிறாராம். முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இப்படத்தை அவர் எடுத்தாலும்; இப்படத்தின் கதையில் வேறு சில விஷயங்களையும் அவர் சேர்த்திருப்பதாகவே தெரிகிறது. இதனால் ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் இதன் மீது விண்ணளவு நம்பிக்கை இருப்பதாக கோலிவுட்டில் தகவல்கள் பறக்கின்றன.
நட்சத்திர பட்டாளம்: முதல் பாகத்தில் மோகன் லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. அதே ஃபார்முலாவை இதிலும் நெல்சன் பின்பற்றுவதாக கூறப்படுகிறது. இந்த முறை பாலைய்யா, வித்யா பாலன் உள்ளிட்டோரை படத்தில் இயக்குநர் களமிறக்கியிருப்பதாகவும் தெரிகிறது. அவர்கள் மட்டுமின்றி பாலிவுட் பாட்ஷாவான ஷாருக்கானையும் இதில் நடிக்க வைக்கிறார் என்று முணுமுணுப்புகள் கேட்கின்றன.
கூலி மாதிரி இருக்காதே?: ஏற்கனவே கூலி படத்திலேயே ஷாருக்கை நடிக்க வைக்க லோகேஷ் பிளான் செய்திருந்தார். அவர் ஒத்துக்கொள்ளாததால் அமீர் கானை களமிறக்கினார். இந்நிலையில் கூலி படத்தில் நடிக்க ஒத்துக்கொள்ளாத அவர் ஜெயிலர் 2வில் ஏன் நடிக்க ஒத்துக்கொண்டார் என்ற கேள்விதான் எல்லோரிடமும் எழுந்திருக்கிறது. அதாவது இப்படத்தில் ரஜினிகாந்த்தின் நீண்ட கால நண்பராக அவரது கேரக்டரை நெல்சன் வடிவமைத்திருப்பதாகவும்; கதையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் ரோல் அது என்றும் சொல்லித்தான் ஷாருக்கை இயக்குநர் காம்ப்ரமைஸ் செய்திருப்பதாகவும் பேச்சு ஓடுகிறது. முக்கியமாக கூலி படத்தில் முக்கியத்துவமே இல்லாத கேரக்டரில் அமீர் கான் நடித்ததுபோல் தான் நடிக்கமாட்டேன் என்று கண்டிஷன் போட்டுத்தான் இதற்குள் அவர் வந்திருப்பதாக பாலிவுட், கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











