Thalapathy 63: விஜய்யை வம்பிழுக்கிறதுக்குன்னே கிளம்பி வரும் ஷாருக்கான்?
Recommended Video
சென்னை: தளபதி 63 படத்தில் விஜய்க்கு முக்கிய வில்லனாக ஷாருக்கான் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 63 படத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிக்கக்கூடும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் சேப்பாக்கத்தில் நடந்த ஐபிஎல் போட்டியின்போது ஷாருக்கான் அருகே அட்லி அமர்ந்திருந்ததை பார்த்த ரசிகர்கள் இது கண்டிப்பாக படம் தொடர்பாகத்தான் என்றார்கள்.
அதன் பிறகு ஷாருக்கானும் அட்லியின் அலுவலகத்திற்கு சென்றார்.

ஷாருக்கான்
தளபதி 63 படத்தில் ஷாருக்கான் வில்லனாக நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. படத்தின் முக்கிய வில்லனே ஷாருக்கான் தானாம். கிளைமாக்ஸ் நெருங்கும் போது வரும் அவரின் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாம்.

வில்லன்
ஷாருக்கான் 15 நிமிடங்கள் மட்டுமே வந்தாலும் விஜய்க்கு பிரச்சனை கொடுக்கும் முக்கிய வில்லனாம். இந்த கதாபாத்திரத்திற்கு பாலிவுட்டில் இருந்து தான் நடிகரை அழைத்து வர வேண்டும் என்று விரும்பினாராம் அட்லி.

தமிழ்
ஷாருக்கானை அணுகி விஜய்க்கு வில்லனாக நடிக்குமாறு கேட்டதும் அவர் ஒப்புக் கொண்டாராம். தளபதி 63 தவிர அட்லியும், ஷாருக்கானும் சேர்ந்து இந்தி படம் பண்ணப் போகிறார்களாம்.

அட்லி
விஜய்யின் முக்கிய வில்லன் ஷாருக்கான் என்று அட்லி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை காத்திருப்போம். ஷாருக்கான் புதிது புதிதாக ஏதாவது முயற்சி செய்ய விரும்பும் நிலையில் விஜய் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். அது ஏன் பாலிவுட் நடிகர் என்றால் வில்லனாகத் தான் போட வேண்டுமா?


Click it and Unblock the Notifications











