ஹேப்பி நியூ இயர் ரிலீஸுக்கு முன்பே ரூ.200 கோடி லாபம் பெற ஷாருக்கானின் 'ஜகஜால' திட்டம்

By Siva

மும்பை: ஷாருக்கான் தான் தயாரித்து நடிக்கும் ஹேப்பி நியூ இயர் படம் வெளியாகும் முன்பே ரூ.200 கோடி லாபம் பார்க்க ஒரு சூப்பர் திட்டம் வைத்துள்ளார்.

ஷாருக்கான் தனது தோழி ஃபரா கானின் இயக்கத்தில் தீபிகா படுகோனேவுடன் சேர்ந்து ஹேப்பி நியூ இயர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அபிஷேக் பச்சன், சோனு சூத், போமன் இரானி உள்ளிட்டோரும் உள்ளனர்.

இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸாக உள்ளது.

விளம்பரம்

விளம்பரம்

ஹேப்பி நியூ இயர் படத்தை விளம்பரப்படுத்த வெளிநாடுகள் மற்றும் இந்தியாவில் பிரமாண்டமான டான்ஸ் நிகழ்ச்சிகளை நடத்த ஷாருக்கான் திட்டமிட்டுள்ளார். அதற்கான வேலையிலும் இறங்கிவிட்டார்.

தீபிகா

தீபிகா

டான்ஸ் நிகழ்ச்சிகளில் ஹேப்பி நியூ இயர் படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் கலந்து கொள்கிறார்கள். இதற்காக அவர்களுக்கு கூடுதல் சம்பளம் தர ஷாருக்கான் முன்வந்துள்ளார்.

அமெரிக்கா

அமெரிக்கா

அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா என்று தனக்கு ரசிகர்கள் அதிகம் உள்ள நாடுகளில் ஷாருக்கான் இந்த டான்ஸ் நிகழ்ச்சியை நடத்துகிறார். மேலும் சில நாடுகளிலும் நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளார்.

ரூ.200 கோடி

ரூ.200 கோடி

25 முதல் 30 டான்ஸ் நிகழ்ச்சிகளை அவர் நடத்தவிருக்கிறார். ஒவ்வொரு நிகழ்ச்சி மூலமும் ரூ.7 கோடி வருமானம் கிடைக்குமாம். அப்படி என்றால் படம் ரிலீஸாவதற்குள் ரூ.200 கோடி லாபம் பார்த்துவிடுவார்.

மாத்தி யோசி

மாத்தி யோசி

பொதுவாக படங்களை விளம்பரம்படுத்த அதில் நடித்த நடிகர், நடிகைகள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார்கள். மேலும் பெரிய நகரங்களில் உள்ள ஷாப்பிங் மால்களில் ரசிகர்களை சந்திப்பார்கள். ஆனால் ஷாருக்கானோ மாத்தி யோசித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X