அடேங்கப்பா ஷாருக்கான் சொத்து மதிப்பு 7,300 கோடி ரூபாய்.. திரைத்துறையில் முதலிடம் அவருக்குதான்

டெல்லி: பாலிவுட் பாஷா என்று அழைக்கப்படுபவர் ஷாருக்கான். இந்தியா முழுவதும் அவருக்கென்று ரசிகர்கள் ஏராளமாக இருக்கின்றனர். பல வருடங்களாக நடித்துவரும் ஷாருக் இன்றும் ஹிந்தியில் இருக்கும் இளம் ஹீரோக்களுக்கு போட்டியாக வலம் வந்துகொண்டிருக்கிறார். அதுமட்டுமின்றி உலகத்தின் செல்வாக்கு மிகுந்த நபர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த அவரது சொத்து மதிப்பு குறித்த புதிய அறிவிப்பு வெளியாகி திரைத்துறையினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது

ஷாருக்கான் கடந்த வருடம் பதான், ஜவான், டன்கி ஆகிய படங்களில் நடித்திருந்தார். சித்தார்த் ஆனந்த் இயக்கிய பதான் படத்தில் தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். நான்கு ஆண்டுகளுக்கு பின்பு ஷாருக்கான் நடித்திருந்ததால் அந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் உருவாக்கியது. எதிர்ப்புகளுக்கு இடையில் படமானது கடந்த வருடம் ஜனவரி 25ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. பல எதிர்ப்புகளை சந்தித்தாலும் பதான் படம் 1000 கோடி ரூபாயை வசூலித்து மாஸ் சாதனை படைத்தது.பதான் படத்தின் மாபெரும் வெற்றி ஒட்டுமொத்த பாலிவுட்டையும் ஆச்சரியப்பட வைத்தது. இதனையடுத்து அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்தார் ஷாருக்கான்.

shah rukh khan bollywood

முதல் படம்: அட்லீக்கு அது முதல் ஹிந்தி படம் என்பதால் எப்படிப்பட்ட வசூலை எடுத்து விமர்சனத்தை சந்திக்கப்போகிறது என்ற கேள்வி பலரிடமும் எழுந்திருந்தது. படத்துக்கு தமிழ்நாட்டில் சரியான வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் வட மாநிலங்களில் பலத்த வரவேற்பு கிடைத்தது. படமும் ஆயிரம் கோடி ரூபாய்வரை வசூல் செய்து சாதனை படைத்தது. இதனால் ஷாருக்கான், அட்லீ ஆகிய இருவருமே ஹேப்பியில் இருக்கின்றனர்.

டன்கி: இப்படி கடந்த வருடம் வரிசையாக ஷாருக்கானுக்கு இரண்டு மெகா ஹிட் படங்கள் அமைந்துவிட்டன. இந்தச் சூழலில்தான் கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஷாருக்கான் நடிப்பில் மூன்றாவது படமாக டன்கி வெளியானது. ராஜ்குமார் ஹிரானி இயக்கியிருந்த அந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பே கிடைத்தது. மேலும் 470 கோடி ரூபாய்வரை வசூல் செய்ததாகவும் கூறப்படுகிறது.

அடுத்த படம்: ஜவான் படம் கொடுத்த மாபெரும் வெற்றியின் காரணமாக அவர் அடுத்ததாக அட்லீயின் இயக்கத்தில்தான் ஒரு படத்தில் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. விரைவில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்றும்; அந்தப் படத்தையும் ஜவான் படம் போல் மெகா ப்ளாக் பஸ்டராக கொடுக்க இரண்டு பேரும் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே கிங் என்ற படத்திலும் அவர் நடிக்கவிருக்கிறார். அதன் ஷூட்டிங் விரைவில் தொடங்குகிறது.

புதிய பட்டியல்: இந்நிலையில் இந்தியாவில் பணக்கார பட்டியலை ஹுருன் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. அதில் திரைத்துறையை பொறுத்தவரை ஷாருக்கான் முதலிடத்தில் இருக்கிறார். அவருக்கு மொத்தம் 7,300 கோடி ரூபாய் நிகர சொத்து மதிப்பு இருக்கிறது. அவருக்கு அடுத்ததாக திரைத்திறையிலிருந்து ஜுஹி சாவ்லாவும் (4,600 கோடி ரூபாய்), ஹிருத்திக் ரோஷன் மூன்றாவது இடத்தையும், அமிதாப் பச்சன் குடும்பத்தினர் நான்காம் இடத்தையும் பிடித்திருக்கிறார்கள். அதேபோல் எக்ஸ் தளத்தில் ஷாருக்கானுக்கு 44.1 மில்லியன் ஃபாலோயர்ஸ் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X