பிரான்ஸின் உயரிய விருதான நைட் ஆப் தி லெஜன் ஆப் ஹானரை பெற்ற ஷாருக்கான்

By Siva

மும்பை: நடிகர் ஷாருக்கானுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான நைட் ஆப் தி லெஜன் ஆப் ஹானர் கிடைத்துள்ளது.

பாலிவுட் பாதுஷா என்று அழைக்கப்படும் ஷாருக்கான் திரைத்துறையில் செய்த சாதனைகளை பாராட்டி பிரான்ஸ் அவருக்கு தங்கள் நாட்டின் உயரிய விருதான நைட் ஆப் தி லெஜன் ஆப் ஹானரை வழங்கி கௌரவித்துள்ளது.

இந்த விருதை இந்தியா வந்துள்ள பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் லாரன்ட் பேபியஸ் ஷாருக்கிற்கு செவ்வாய்க்கிழமை இரவு வழங்கினார்.

அம்மா

அம்மா

இந்த உயரிய விருதை பெறுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். இன்று என் அம்மாவின் பிறந்தநாள். அவர் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் எனக்கு இந்த விருது கிடைத்திருப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைந்திருப்பார் என்றார் ஷாருக்.

தனி ஆள்

தனி ஆள்

இந்த விருதை தனி ஆளாக வாங்கவில்லை மாறாக நூற்றுக்கணக்கான திரைத்துறையினரின் சார்பில் பெற்றுக் கொள்கிறேன் என்று ஷாருக்கான் விருது விழாவில் தெரிவித்தார்.

இந்திய சினிமா

இந்திய சினிமா

எனக்கு பிடித்த துறையை அங்கீகரித்துள்ளது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. இந்த விருது இந்திய சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உதவியாக இருக்கும். இந்த விருதை வழங்கிய பிரான்ஸ் அதிபருக்கு என் மனமார்ந்த நன்றி என்று கூறினார் ஷாருக்.

அமிதாப்

அமிதாப்

நைட் ஆப் தி லெஜன் ஆப் ஹானர் விருதை பெறும் இரண்டாவது பாலிவுட் நடிகர் ஷாருக்கான். முன்னதாக அமிதாப் பச்சனுக்கு பிரான்ஸ் இந்த விருதை வழங்கி கௌரவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஷாருக்கான்

ஷாருக்கான்

நடிகர், தயாரிப்பாளர், தொழில் அதிபர் என்று பலமுகம் கொண்ட ஷாருக் நடிக்க வந்து 22 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இருப்பினும் இன்றும் கிங்காக உள்ளார்.

டிவி

டிவி

ஷாருக்கான் திரைப்படங்களில் நடிக்க வரும் முன்பு மேடை நாடகங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X