தோழிக்காக 8 பேக்ஸ் வைத்த ஷாருக்கான்
மும்பை: ஷாருக்கான் ஹேப்பி நியூ இயர் படத்திற்காக 8 பேக்குகள் வைத்து கலக்கலாக உள்ளார்.
ஷாருக்கான் தனது நெருங்கிய தோழி ஃபரா கானின் இயக்கத்தில் ஹேப்பி நியூ இயர் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடித்துள்ளார். படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது.
ஷாருக்கான் ஹேப்பி நியூ இயருக்காக தனது உடலை கும்மென்று ஆக்கியுள்ளார்.

ஓம் சாந்தி ஓம்
ஃபரா கான் இயக்கத்தில் ஓம் சாந்தி ஓம் படத்தில் நடித்தபோது ஷாருக்கான் 6 பேக்ஸ் வைத்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.

8 பேக்ஸ்
தற்போது ஹேப்பி நியூ இயர் படத்திற்காக 8 பேக்ஸ் வைத்துள்ளார் ஷாருக். இதற்காக அவர் கடுமையாக ஒர்க்அவுட் செய்துள்ளார்.
வீடியோ
தான் ஒர்க்அவுட் செய்து 8 பேக்ஸ் வைத்த வீடியோவை ஷாருக்கான் வெளியிட்டுள்ளார்.

பயிற்சியாளர்
வீடியோவில் பயிற்சியாளரும், ஃபரா கானும் ஷாருக்கை ஊக்குவிக்கிறார்கள். ஃபரா ஷாருக்கை பார்த்து உன்னால் முடியும் என்று கூறி நண்பனை ஊக்குவிக்கிறார்.

சல்மான்
இரவு 2 மணி ஆனாலும் ஒர்க் அவுட் செய்யாமல் தூங்க போகாத நடிகர் சல்மான் கான் ஷாருக்கான் 8 பேக்ஸ் வைத்துள்ளதை பார்த்து அவரை பாராட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications











