புகைபிடிப்பதை கைவிட்ட ஷாரூக்கான்.. குடிக்காதீங்கனு தலைவர் சொன்னதைப்போல் வேண்டுகோள்
மும்பை: பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக் கான். இவர் இந்தியாவிலேயே அதிகாரப்பூர்வமாக அதிக சம்பளம் வாங்கும் நடிகராக உள்ளார். இவர் ஒரு படத்தில் நடிக்க ரூபாய் 250 கோடிகள் சம்பளமாகப் பெருகின்றார்.இதுமட்டும் இல்லாமல், ஷாரூக் கான் படத்தாயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகின்றார். அதிலும் தனது படங்களைத் தயாரித்து பாக்ஸ் ஆஃபீஸில் வசூல் செய்து வருகின்றார். இவர் கடந்த 2ஆம் தேதி தனது 59வது பிறந்த நாளைக் கொண்டாடினார். அதைத் தொடர்ந்து ரசிகர்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், தான் புகைப்பிடிப்பதை நிறுத்திவிட்டதாகத் தெரிவித்தார்.
நடிகர் ஷாரூக் கான், இந்தி நடிகர் என்றாலும் இந்தியாவின் முகம் என்றே இவரைக் கூறலாம். இந்தியாவின் அனைத்து மூலை முடுக்குகளிலும் இவருக்கு ரசிகர்கள் உண்டு. குறிப்பாக பெண் ரசிகர்கள் இவருக்கு ஏராளம். தனது சினிமாவின் தொடக்க காலத்தில் காதல் மன்னனாக நடித்து வந்தாலும், ஒரு கட்டத்திற்கு மேல் அதிரடி ஆக்ஷன் படங்களில் நடித்தார். அப்போதும் பெண் ரசிகர்கள் இவரை தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடினர். இப்போது பாலிவுட் சினிமாவின் கிங் ஆக ஷாரூக் கான் உள்ளார்.

இவர் கடந்த 2ஆம் தேதி இவர் தனது 59வது பிறந்த நாளைக் கொண்டாடினார். இவருக்கு ரசிகர்கள் தொடங்கி அரசியல் தலைவர்கள், இந்தியா முழுவதும் உள்ள பல திரைப்பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர். வழக்காம தனது பிறந்த நாளில் தனது ரசிகர்கள் அவரது வீட்டின் முன் கூடிவிடுவார்கள். அவர்களைப் பார்த்து கையசைத்துவிட்டுச் செல்வார். ஆனால் இம்முறை ரசிகர்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டனர்.
சிகரெட்: அப்போது பேசிய அவர், பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். மேலும், தன் மீது இவ்வளவு அன்பு வைத்துள்ள ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தான் புகைப்பிடிப்பதை முற்றிலுமாக தான் கைவிட்டுவிட்டதாகக் கூறினார். இவர் இவ்வாறு கூறியதும் அங்கு கூடியிருந்த ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். மேலும் ரசிகர்களையும் புகைபிடிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டார். தான் ஒரு நாளைக்கு 100 சிக்ரெட்டுகளுக்கு மேல் பிடித்து வந்தேன். இப்போது அவற்றையெல்லாம் முற்றிலுமாக கைவிட்டுவிட்டேன்.

மூச்சுத் திணறல்: தொடக்கத்தில் இது சாத்தியமா என்ற சந்தேகம் எனக்கே இருந்தது. இதனைக் கைவிட்டதால் மூச்சுத் திணறலும் கூட ஏற்பட்டது. ஆனால் அவற்றை கைவிடவேண்டும் என தீர்மானமாக இருக்கின்றேன். புகைபிடிக்கவேண்டும் என எனக்கு தோன்றும்போது கருப்பு காஃபி குடிக்கின்றேன். இதனால் ஒரு நாளைக்கு 30முறை கருப்பு காஃபி குடிக்கின்றேன் எனக் கூறினார். ஷாரூக்கான் இவ்வாறு பேசியது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. மேலும் இவரது இந்த அறிவுரையைக் கேட்ட பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
ரஜினிகாந்த்: அதேபோல் ஜெய்லர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசுகையில், தனது ரசிகர்களை எக்காரணம் கொண்டும் மதுவுக்கு அடிமை ஆகிவிடாதீர்கள் என கோரிக்கை வைத்தார். எப்போதாவது ஜாலியாக இருக்க மஜாவாக இருக்கும்போது குறைந்த அளவில் எடுத்துக்கொள்ளுங்கள் எனக் கூறினார். மேலும் சிகரெட் பழக்கம் மட்டும் கூடவே கூடாது எனக் கூறினார். சூப்பர் ஸ்டாரைப் போலவே, ஷாரூக் கான் கூறியிருப்பதாக இணையத்தில் பேசி வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











