twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பெண் போலீஸ் என்ன, ராணுவ வீரர்களுடன் கூடவும் தான் ஆடியிருக்கேன்: ஷாருக் கான்

    By Siva
    |

    மும்பை: என்னுடன் ஒரு போலீஸ் டான்ஸ் ஆடினார் என்று பிறர் சர்ச்சையை கிளப்பிவில்லை ஒரு பெண் ஆடினார் என்பதால் தான் என்று நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.

    ரக்ஷா பந்தன் கொண்டாட்டம் கடந்த சனிக்கிழமை மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்த விழாவில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கலந்து கொண்டு நடிகர் ஷாருக்கானுக்கு ராக்கி கட்டினார். அப்போது நடந்த கலை நிகழ்ச்சிகளில் ஷாருக் பெண் போலீஸ் ஒருவரை தூக்கி டான்ஸ் ஆடியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

    இந்நிலையில் இது குறித்து ஷாருக்கான் கூறுகையில்,

    ராணுவ வீரர்கள்

    ராணுவ வீரர்கள்

    நான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வீர் ஜாரா படத்தின் படப்பிடிப்பில் இருக்கையில் நான் சீருடையில் இருந்த ராணுவ வீரர்களுடன் டான்ஸ் ஆடியுள்ளேன்.

    நடிகர்கள்

    நடிகர்கள்

    1960கள், 70களில் நடிகர்கள் எல்லைக்கு சென்று ராணுவ வீரர்களுக்காக டான்ஸ் ஆடினர். அப்போது போர் நடந்த நேரம்.

    மும்பை

    மும்பை

    நான் மும்பையிலும் அப்படி டான்ஸ் ஆடியிருக்கிறேன். ஆனால் தற்போது அவர்களுக்கு சீருடை பிரச்சனை இல்லை. சீருடையில் இருந்தது பெண் என்பதால் தான் பிரச்சனை.

    பாகுபாடு

    பாகுபாடு

    இப்படி ஆண், பெண் என்று பாகுபாடு பார்ப்பது அல்பத்தனமாக உள்ளது. நாளைக்கு நான் பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு செல்வேன். அங்கும் இதை பற்றி தான் கேட்பார்கள் என்றார்.

    English summary
    Reacting to criticism over dancing with a lady constable in Kolkata, superstar Shah Rukh Khan has denied the reports and said some people are raking it up not since a police personnel in uniform danced but because it was a woman who shook a leg with him.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X