50ஐ நெருங்கும் ஷாருக் அசத்தல் 10 பேக்… பாராட்டிய சல்மான்
சென்னை: வயசானாலும் இளமையும், அழகும் மாறவே இல்லை என்று ஷாருக்கானை கொண்டாடுகின்றனர் இளம் பெண்கள் அந்த அளவிற்கு தன்னுடைய டென் பேக் போட்டோவை போட்டு அசத்தியுள்ளார் ஷாருக்கான்.
இந்த டென்பேக் ஒரிஜினலானதுதான் என்று பலருக்கும் சந்தேகம் எழுந்திருக்கலாம், ஆனால் இதை நேரிலேயே சென்று பார்த்து பாராட்டியுள்ளார் சல்மான்கான்.
டென் பேக் வைக்க ஷாருக்கான் ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார். இது நூறு சதவிகிதம் உண்மையானது என்று சர்டிபிகேட் கொடுத்துள்ளார் சல்மான்.

சிக்ஸ் பேக்
சிக்ஸ் பேக் என்ற கலாச்சாரம் ஹாலிவுட்டில் இருந்து பாலிவுட்டுக்கு வந்ததா இல்லை கோலிவுட்டில் இருந்து வந்ததா என்று தெரியவில்லை சமீபகாலமாக தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் சிக்ஸ் பேக்கை காட்டி நடித்து வருகின்றனர். அப்படி சிக்ஸ் பேக் காட்டி நடித்த படங்கள் ஓடவில்லை என்பது ஒருபுறம் இருக்க அந்த சிக்ஸ் பேக்கை வரவைக்க இவர்கள் படும்பாடு பெரும்பாடு என்று கூறுவார்கள்.

டென் பேக் ஷாருக்
இதென்ன பிரமாதம் நான் வைத்திருக்கிறேன் பாருங்கள் டென் பேக் என்று பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் சமீபத்தில் ஒரு புகைப்படத்தை அவரது ட்விட்டரில் வெளியிட்டார், அதில் அவர் 10பேக் வைத்து அசத்தியிருக்கிறார். இது முதல் முறையாக யாரும் வைக்காத பேக்.

டாப்லெஸ் ஷாருக்
ஷாரூக்கானின் இந்த புதிய 10 பேக் தோற்றத்துடன் கூடிய டாப்லெஸ் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் மில்லியன்கணக்கில் ஷேர் ஆகிக்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

ஹேப்பி நியூ இயர்
ஃப்ராக் கான் இயக்கும் ‘ஹேப்பி நியூ இயர்' என்ற் புதிய படத்திற்காகத்தான் இந்த புதிய 10 பேக் தோற்றத்தை அவர் ஏற்படுத்திக்கொண்டதாக தனது டிவிட்டரில் ஷாரூக்கான் கூறியுள்ளார்.

ரொம்ப கூச்சமா இருக்குப்பா
இந்த படத்தில் டான்ஸர் மற்றும் திருடன் என இரண்டு வேடத்தில் நடிப்பதாக தெரிவித்துள்ள ஷாரூக், தனது பத்து பேக் உடலை வெளிப்படுத்த தனக்கு கூச்சமாக இருப்பதாக கூறியுள்ளார்.

மகன்தான் காரணம்
தான் இந்த 10 பேக்குடன் கூடிய கட்டுமஸ்தான உடம்பை பெற, தனது உடற்பயிற்சியளார் பிரசாந்த் ஸ்வந்த் மற்றும் இதற்கு தூண்டுதலாக இருந்த அவரது மகன் ஆரியன் ஆகியோர்தான் முக்கிய காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.

தீபாவளி வரை காத்திருங்க
‘ஹேப்பி நியூ இயர்' படத்தில் ஷாருக் உடன் தீபிகா படுகோனே, அபிஷேக் பச்சன், பாமன் இரானி, ஜாக்கி ஷெராப் உள்ளிட்டவர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் . டென் பேக் ஷாருக்கை பார்க்க தீபாவளி காத்திருங்கள் என்கிறார். படம் தீபாவளிக்குத்தான் ரிலீசாம்.


Click it and Unblock the Notifications











