ஷாருக்கான் கேட்ட கேள்வி?.. சண்டை போட்ட மகள் சுஹானா?.. அதுக்குள்ள அவரை பூமர் ஆக்கிட்டாங்களே ப்பா!
சென்னை: பாலிவுட் பாட்ஷா என்று அழைக்கப்படுபவர் ஷாருக்கான். அவருக்கு ஆர்யன் கான் என்ற மகனும், சுஹானா கான் என்ற மகளும் இருக்கிறார்கள். அவர்கள் இரண்டு பேருமேகூட தந்தை மாதிரி திரைத்துறையில்தான் இருக்கிறார்கள். இந்நிலையில் ஷாருகான் மற்றும் அவரது மகள் சுஹானா கான் பற்றி சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவரும் தகவல் ஒன்று கவனத்தை ஈர்த்திருக்கிறது.
பாலிவுட் திரைத்துறயில் கடந்த பல வருடங்களாக அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறார் ஷாருக்கான். பாலிவுட் பாட்ஷா, தி கிங் என பலராலும் அழைக்ப்படும் அவர் கடைசியாக டங்கி, ஜவான், பதான் என வரிசையாக மூன்று படங்களில் நடித்தார். மூன்று படங்களுமே மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. முக்கியமாக ஜவானும், பதானும் மொத்தம் 1000 கோடி ரூபாய் வசூலித்தது குறிப்பிடத்தக்கது. டங்கி படமும் அதிக வசூல் என்றே கூறப்பட்டது. இதனால் அவர் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்.
ஷாருக்கின் குடும்பம்: இதற்கிடையே ஷாருக்கான் கடந்த 1991ஆம் ஆண்டு கௌரியை திருமணம் செய்துகொண்டார். அந்தத் தம்பதிக்கு ஆர்யன் கான் என்ற மகனும், சுஹானா கான் என்ற மகளும் இருக்கிறார்கள். சில வருடங்களுக்கு முன்பு போதை பொருள் வழக்கில் ஆர்யன் அதிரடியாக கைது செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. பிறகு வெளியே வந்த அவர் The Ba***ds of Bollywood என்ற வெப் சீரிஸை சமீபத்தில் இயக்கியிருந்தார்.

மகளும் நடிகை: ஷாருக்கானின் மகள் சுஹானாவும் தனது தந்தை போன்றே திரைத்துறையில் இருக்கிறார். The Archies உள்ளிட்ட படங்களில் நடித்த அவர் இப்போது ஷாருக்குடன் சேர்ந்து கிங் படத்திலும் நடித்துவருகிறார். கண்டிப்பாக ஷாருக் போன்றே இவரும் திரைத்துறையில் தவிர்க்க முடியாத ஆளுமையாக வருவார் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் அவர் பற்றி சமூக வலைதளங்க்ளில் புதிய தகவல் ஒன்று வட்டமடிக்க ஆரம்பித்திருக்கிறது.
என்ன தகவல்?: அந்தத் தகவல்படி, "ஷாருக்கானின் மகள் சுஹானா கான் ஒருநாள் வீட்டிலிருந்து மிகவும் குறைந்த ஆடையை அணிந்தபடி வெளியே கிளம்பினார். அப்போது ஷாருககனோ, 'எதற்காக இவ்வளவு குறைந்த ஆடையை அணிந்துகொண்டு வெளியே போகிறாய் என்று கேட்டார். அதை கேட்ட சுஹானாவுக்கு கோபம் உச்சந்தலைக்கு ஏறிவிட்டது. கோபத்தோடு அவர் ஷாருக்கிடம், 'ஆர்யன் கானும்தான் குறைந்த ஆடையை அணிகின்றான்; அவனை நீங்கள் எதுவும் கேட்பதில்லையே' என கேட்டார்.
ஷாருக்கின் பதில்: அதற்கு ஷாருக்கானோ, "இதோ பார். எந்த உலோகத்தையும் எங்கு வேண்டுமானாலும் வைக்கலாம். ஏனென்றால் அதற்கு எந்தப் பிரச்னையும் வராது. ஆனால் தங்கத்தை பத்திரமாக பெட்டகத்தில்தான் வைப்பார்கள். ஏனெனில் அது மிகவும் விலையுயரந்தது என கூறினாராம். இந்தத் தகவலில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை. அதேசமயம் இதை சோஷியல் மீடியாவில் கவனித்த ரசிகர்கள் பலரும், 'இது உண்மையாக இருந்தால் ஷாருக்கான் சரியான பூமரோ' என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











