அடேங்கப்பா.. 56 வயதில் 8 பேக் வைத்த ஷாருக்கான்.. பதான் படம் வேற லெவலில் மிரட்டப் போவது கன்ஃபார்ம்!
மும்பை: பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர் ஷாருக்கான் பதான் படத்திற்காக வைத்திருக்கும் 8 பேக் லுக் போஸ்டர் ரசிகர்களை வாய் பிளக்க வைத்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவிருக்கிறது.
இந்நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஓனர் ஷாருக்கான் இப்படியொரு கில்லிங் லுக்கை வெளியிட்டு இருக்கிறாரே என ரசிகர்கள் மிரண்டு போயுள்ளனர்.

ஷாருக்கானின் பதான்
2018ம் ஆண்டுக்கு பிறகு இன்னமும் ஒரு படத்தை கூட ரிலீஸ் செய்யாமல் ரசிகர்களை காக்க வைத்து வரும் நடிகர் ஷாருக்கான் வார் படத்தை இயக்கிய சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பதான் எனும் படத்தில் நடித்து வருகிறார். ஷாருக்கான் உடன் தீபிகா படுகோன் மற்றும் ஜான் ஆபிரகாம் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். அடுத்த ஆண்டு ஜனவரி 25ம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த படம் வெளியாகிறது.

8 பேக்ஸ்
இந்நிலையில், அந்த படத்திற்காக நடிகர் ஷாருக்கான் வைத்துள்ள 8 பேக்ஸ் லுக் போட்டோவை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து டிரெண்ட் செய்துள்ளார் பாலிவுட் பாட்ஷா. அவரது செஸ்ட் பகுதி முதல் வயிறு பகுதி வரை அடுக்கடுக்காக இருக்கும் அத்தனை கட்ஸ்களை பார்த்து ரசிகர்களும் பாலிவுட் பிரபலங்களும் வாயடைத்துப் போயுள்ளனர்.

56 வயதில்
நடிகர் ஷாருக்கானுக்கு 56 வயதாகிறது. இந்த வயதில் இப்படியொரு ஃபிசிக்கல் ஃபிட்னஸை எப்படி சாதித்தார் ஷாருக்கான் என ஏகப்பட்ட ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் ஆச்சர்யத்துடன் ஷாருக்கானை பாராட்டி வருகின்றனர். சில நெட்டிசன்கள் எல்லாம் ஸ்டெராய்டு செய்த மாயம் என ட்ரோல் செய்து வருகின்றனர்.

கேகேஆர் ரசிகர்களை கவர
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி இன்று மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ள நிலையில், கொல்கத்தா ரசிகர்களை கவர இப்படியொரு போஸ்ட் போட்டுள்ளாரா ஷாருக்கான் என கேள்விகளும் கிளம்பி உள்ளன.

ஷாருக் பிளஸ்
நடிகர் ஷாருக்கான் SRK+ எனும் ஓடிடி தளத்தையும் தொடங்கப் போவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். சினிமா, பிசினஸ், ஸ்போர்ட்ஸ் என அனைத்து துறையிலும் ஷாருக்கான் மாஸ் காட்டி வருகிறார். பதான் திரைப்படம் லேட்டா வந்தாலும் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











