நேற்று மாலை, ரகசியமாக மருத்துவமனைக்குச் சென்ற ஷாரூக்கான்...

மும்பை: நேற்று மாலை நவ்சாரி பில்டிங்கில் உள்ள மருத்துவமனைக்கு திடீர் விசிட் அடித்துள்ளார் ஷாரூக்கான்.

உடன் அவரது மனைவி கௌரியும் இருந்தது இன்னும் ஆச்சர்யமான விஷயம். காரணம் கௌரி இன்னேரம் அவர்களது வாடகைத் தாயுடம் மும்பையில் இருப்பார் என்றே அனைவரும் கருதி வந்தனர்.

ஏற்கனவே, ஆணொன்றும், பெண்ணொன்றுமாக இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள் ஷாரூக்- கௌரி தம்பதியினருக்கு. இந்தியாவின் தலை சிறந்த தந்தை என தேர்ந்தெடுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்ட ஷாரூக், தனது மூன்றாவது குழந்தையை வாடகைத் தாய் மூலம் பெற்றெடுக்கத் திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில் ஷாரூக் அவரது மனைவி சகிதமாக மருத்துவமனைக்கு திடீர் விசிட் அடித்ததும் மீடியாக்களுக்கு பரபரப்பு கூடியது.

வாடகைத்தாய்...

வாடகைத்தாய்...

வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளத் திட்டமிட்ட ஷாரூக்கான், அக்குழந்தைக்கான வாடகைத்தாயை லண்டனில் தக்க வைத்துள்ளார். அங்கு பிரசவம் நடப்பதன் மூலம் அக்குழந்தைக்கு அந்நாட்டு பிரஜை உரிமை வாங்க திட்டமிட்டுள்ளாராம் ஷாரூக்கான்.

ஆணா... பெண்ணா...

ஆணா... பெண்ணா...

வாடகைத்தாய் மூலம் பிறக்கப்போகும் குழந்தை ஆணாகத் தான் இருக்க வேண்டும் எனக் கூறி பிரச்சினையில் சிக்கினார் ஷாரூக். பின்னர் அதிலிருந்து ஒரு வழியாக மீண்டு வந்தார்.

லண்டனில் பிரசவம்...

லண்டனில் பிரசவம்...

லண்டனில் அப்பெண்ணிற்கு விரைவில் பிரசவம் நடை பெறும் என அனைவரும் எதிர்பார்த்திருக்கும் வேளையில் ஷாரூக்கின் இந்த திடீர் மருத்துவமனை விசிட்டால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

குழந்தைக்கான விசாரிப்பா...

குழந்தைக்கான விசாரிப்பா...

பிறக்கப் போகும் குழந்தையைப் பற்றி விசாரிக்கத் தான் மனைவி கௌரியுடன் ஷாரூக் வந்திருந்தார் என முதலில் வதந்தி கிளம்பியது.

கண் எரிச்சல்...

கண் எரிச்சல்...

பின்னர் விசாரித்ததில் தெரிய வந்த விவரம், ஷாரூக் சென்றது கண் மருத்துவனைக்காம். ஷாரூக்கானின் அப்பாயிண்ட்மெண்ட் 45 நிமிடங்கள் தாமதமாக, இடைப்பட்ட நேரத்தில் மருத்துவமனை ஊழியர்களுடன் சிரித்து, சிரித்து புகைப்படம் எடுத்துக் கொண்டாராம் ஷாரூக்.

வயசாகுதுல...

வயசாகுதுல...

கண்களில் உண்டான எரிச்சல் காரணமாக கண் மருத்துவரைப் பார்க்க போயிருந்தாராம் ஷாரூக். ஷாரூக்கை நன்கு பரிசோதித்த மருத்துவர், ‘ உங்களுக்கு வயது ஐம்பதை நெருங்குவதால் உண்டான சாதாரண கண் அழற்சி தான் இது, எனவே பயப்பட வேண்டாம்' என ஆறுதல் கூறி அனுப்பினாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X