எனக்கு 95 வயசானாலும் அந்த பாட்டுக்கு மட்டும் டான்ஸ் ஆடுவேன்.. ஷாருக்கான் உருக்கம்!

மும்பை: பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான், தனக்கு 95 வயதானாலும் 'சையா சையா' பாட்டுக்கு டான்ஸ் ஆடுவேன் எனக் கூறியுள்ளார்.

2018ம் ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜீரோ படத்திற்கு பிறகு, தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை இதுவரை நடிகர் ஷாருக்கான் வெளியிடவில்லை.

குடியரசு தினத்தை முன்னிட்டு நேற்று நடைபெற்ற டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஷாருக்கான், தனக்கு 95 வயதானாலும் 'சையா சையா' பாட்டுக்கு டான்ஸ் ஆடுவேன் எனக் கூறியுள்ளார்.

படுதோல்வி

படுதோல்வி

பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். ஆனால், சமீபகாலமாக அவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் படுதோல்வியை சந்தித்து வருகின்றன. இதனால், கடந்த ஆண்டு எந்தவொரு புதுப்படங்களிலும் ஷாருக்கான் கமீட் ஆகவில்லை.

தீவிரமாக

தீவிரமாக

தனது அடுத்த படம் நிச்சயம் பாலிவுட்டில் மிகப்பெரிய ஹிட் கொடுக்கணும் என்பதற்காக பல இயக்குநர்களிடம் தீவிரமாக கதைக் கேட்டு வந்தார். தமிழ் திரைப்பட இயக்குநர்களான அட்லி மற்றும் வெற்றிமாறனிடமும் ஷாருக்கான் கதைக் கேட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

வதந்தி

வதந்தி

மேலும், ஷாருக்கானை அட்லி இயக்கவுள்ளார், ராஜ்குமார் ஹிரானி இயக்கவுள்ளார் என்ற பல வதந்திகள் வைரலாகின. ஆனால், இதுவரை தனது அடுத்த பட இயக்குநர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஷாருக்கான் வெளியிடவில்லை.

ரியாலிட்டி ஷோ

ரியாலிட்டி ஷோ

குடியரசு தின சிறப்பு நிகழ்ச்சியாக டான்ஸ் +5 நடன நிகழ்ச்சியின் ஷூட்டிங்கில் நேற்று மாலை ஷாருக்கான் கலந்து கொண்டார். சுமார் 6 மணி நேரம் நடந்த அந்த நிகழ்ச்சியின் ஷூட்டிங்கில் வெள்ளை நிற குர்த்தா உடை அணிந்து ஷாருக்கான் கலந்து கொண்டார்.

Recommended Video

ஷாருக்கானின் மகள் அவரை பற்றி என்ன சொல்கிறார் தெரியுமா?- வீடியோ

95 வயதிலும்

தமிழில் உயிரே என்ற தலைப்பில் வெளியான தில் சே படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த சையா சையா பாடலுக்கு 95 வயதிலும் ரயில் மீது ஏறி நடனமாட சொன்னால் கூட நடனமாடுவேன் என நடன நிகழ்ச்சியில் உற்சாகமாக பேசியுள்ளார் ஷாருக்கான்.

வெறும் 50 ரூபாய்

அந்த டான்ஸ் ஷோவில் தாஜ்மகால் பேக்ரவுண்ட் செட்டப் போடப்பட்டிருந்தது. அதனை பார்த்த ஷாருக்கானுக்கு பழைய நினைவுகளும் மலர்ந்தது. தனது முதல் சம்பளமான 50 ரூபாயை எடுத்துக் கொண்டு தாஜ்மகால் பார்க்க போயிருந்தேன் ஆனால், தாஜ்மகால் பேக்ட்ராப்பில் ஒரு புகைப்படத்தைக் கூட தன்னால் எடுத்துக் கொள்ள அப்போது காசு இல்லை என்பதையும் உருக்கமாக அந்த நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.

கிரிக்கெட்

மேலும் டான்ஸ் +5 ஷோ குழுவினருடன் செட்டில் கிரிக்கெட்டும் ஷாருக்கான் விளையாடியுள்ளார். அதன் வீடியோ க்ளிப்களையும் ஷாருக்கான் ரசிகர்கள் மொபைல் போனில் படம்பிடித்து இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

அடுத்த படம்

அடுத்த படம்

ஷாருக்கானின் அடுத்த படம் குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என தகவல்கள் கசிந்துள்ளன. தெலுங்கு இயக்குநர்கள் அல்லது பாலிவுட் இயக்குநர் படத்தில் ஷாருக்கான் நடிப்பார் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X