அட்லீ சார் கிட்ட இருந்து தான் அதை கத்துக்கிட்டேன்.. எவ்ளோ பெரிய சூப்பர் ஸ்டார்.. இப்படி சொல்லிட்டாரே

மும்பை: பாலிவுட்டின் முன்னணி நடிகராக உள்ள ஷாருக்கான் அடிக்கடி ரசிகர்களுடன் ட்விட்டர் உள்ளிட்ட சோஷியல் மீடியாவில் சாட் செய்வது வழக்கம் தான். பல முன்னணி நடிகர்கள் ரசிகர்களை பார்க்கவோ, அவர்களுக்கான அப்டேட்களை கொடுப்பதோ, அட்லீஸ்ட் ஒரு ஹாய் சொல்வது கூட கிடையாது. ஆனால், என்றுமே டவுன் டு எர்த்தாக தனது ரசிகர்கள் தான் தனக்கு எப்போதும் முக்கியம் என இருக்கும் ஒரு சில நடிகர்களில் ஷாருக்கானுக்கு என்று தனி இடமே உண்டு.

ஞாயிற்றுக்கிழமை அதுவுமா சூட்டிங் இல்லாத நிலையில், தனது ரசிகர்களுடன் சாட் செய்துள்ளார். அப்போது ஷாருக்கானின் ரசிகர் கணக்கில் இருந்து வந்த ஒரு ட்வீட்டுக்கு அதை கற்றுக் கொடுத்ததே அட்லீ சார் தான் என ஷாருக்கான் போட்ட ட்வீட் தற்போது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

Shah Rukh Khan says i learned that style from Atlee Sir

இயக்குநருக்கு மரியாதை: ரசிகர்களை எந்தளவுக்கு ஷாருக்கான் மதிக்கிறாரோ அதே அளவுக்கு தன்னை ஹீரோவாக செதுக்கும் ஹீரோக்களையும் ஷாருக்கான் மதித்து வருகிறார். ஜவான் படத்தின் விழாவிலேயே ஷாருக்கான் சார் என்னை தினமும் சார் போட்டுத்தான் அழைப்பார். அதுவே எனக்கு ஒரு மாதிரி இருக்கும் என பேசியுள்ளார். இந்நிலையில், ஜவான் படத்தை முடித்து விட்ட நிலையிலும் இன்றைய ட்வீட்டிலும் அட்லீ சார் என மரியாதையுடன் ஷாருக்கான் குறிப்பிட்டு இருப்பது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது. பல நடிகர்கள் ஏற்றி விட்ட இயக்குநர்களை கழட்டி விட்டும் சண்டை போட்டும் செல்லும் காலத்தில் இப்படியொரு மனிதரா? என கமெண்ட் போட்டு வருகின்றனர்.

அட்லீ சார் கற்றுக் கொடுத்தது: உமன் ப்ரீமியர் லீக் நிகழ்ச்சியில் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் கலந்து கொண்டு மாஸ் பர்ஃபார்மன்ஸ் செய்த புகைப்படத்தை வெளியிட்ட ரசிகர் ஒருவர் அட்லீ இதையெல்லாம் பார்த்தால், இன்னும் பெருசா உங்களை வச்சு படம் பண்ணுவார் சார் என ட்வீட் போட, இதை கற்றுக் கொடுத்ததே அட்லீ சார் தான் என ஷாருக்கான் ட்வீட் போட்டிருக்கிறார்.

Shah Rukh Khan says i learned that style from Atlee Sir

ஓடிவந்த அட்லீ: ஷாருக்கான் இப்படியொரு ட்வீட் போட்டதை பார்த்த அட்லீ உடனடியாக ஓடி வந்து தினம் தினம் உங்களை பார்த்து தான் சார் பல விஷயங்களை கற்றுக் கொண்டு வருகிறேன் என ஷாருக்கான் ட்வீட்டுக்கு பதில் ட்வீட் போட்டு தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.

அடுத்து ஹாலிவுட்: கோலிவுட்டில் ஷங்கரின் உதவி இயக்குநராக பணியாற்றி வந்த அட்லீ ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தளபதி விஜய்யுடன் இணைந்து தெறி, மெர்சல், பிகில் என ஹாட்ரிக் ஹிட் அடித்த அட்லீ அடுத்ததாக பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து ஜவான் எனும் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படத்தை கொடுத்துள்ளார். இன்னும் 3 ஆண்டுகளில் ஹாலிவுட்டிலும் படம் இயக்கப் போகிறேன் என்றும் அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் சமீபத்திய பேட்டியில் கூறினார்.

இந்தி தெரியாது: ஷாருக்கானை வைத்து இந்தியில் ஜவான் படத்தை இயக்கிய அட்லீ அடுத்ததாக பாலிவுட்டில் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து வருண் தவான் நடிப்பில் உருவாகி வரும் பேபி ஜான் படத்தை தயாரித்து வருகிறார். ஆனால், தனக்கு இந்தியே தெரியாது என்றும் ஓரளவு மேனேஜ் பண்ணியே இயக்கி வருகிறேன் என்றும் சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது செம டிரெண்டானது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X