»   »  இயக்குனர் ரோஹித் ஷெட்டியுடன் பணியாற்றுவது ரொம்ப கஷ்டம்: ஷாருக்கான்

இயக்குனர் ரோஹித் ஷெட்டியுடன் பணியாற்றுவது ரொம்ப கஷ்டம்: ஷாருக்கான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் இயக்குனர் ரோஹித் ஷெட்டியுடன் வேலை பார்ப்பது ரொம்ப கஷ்டம் என நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டில் மசாலா படங்கள் கொடுப்பதில் வல்லவர் இயக்குனர் ரோஹித் ஷெட்டி. அவர் ஷாருக்கானை வைத்து சென்னை எக்ஸ்பிரஸ் படத்தை எடுத்து சூப்பர் ஹிட்டாக்கினார். அந்த படம் கொடுத்த உற்சாகத்தில் ஷாருக்கானும், ரோஹித் ஷெட்டியும் மீண்டும் சேர்ந்து பணியாற்ற முடிவு செய்தனர்.

அதன்படி தில்வாலே படத்தில் ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வருகிறார்.

கஜோல்

கஜோல்

தில்வாலே படத்தில் ஹிட் ஜோடியான ஷாருக்கானும், கஜோலும் சேர்ந்து நடிப்பதால் அந்த படத்திற்கு தற்போதே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ரோஹித் ஷெட்டி

ரோஹித் ஷெட்டி

ரோஹித் ஷெட்டி எப்பொழுதுமே சரியான நேரத்தில் படப்பிடிப்பிற்கு வந்துவிடுவார். அவர் எந்த இடத்திற்கும் குறிப்பிட்ட நேரத்திற்கு 5 முதல் 10 நிமிடங்கள் முன்பாகவே வந்துவிடுவார் என்று தெரிவித்துள்ளார் ஷாருக்கான்.

கஷ்டம்

கஷ்டம்

ரோஹித் ஷெட்டிக்கு முன்பாக படப்பிடிப்பு தளத்திற்கு வந்துவிட வேண்டும் என்று தான் நினைப்பேன். ஆனால் அது இன்று வரை நடக்கவே இல்லை. அவரின் இந்த குணத்தால் அவருடன் பணியாற்றுவது மிகவும் கஷ்டம் என்று ஷாருக்கான் கூறியுள்ளார்.

ஷாருக்கான்

ஷாருக்கான்

எப்பொழுதும் நிகழ்ச்சிகளுக்கு, படப்பிடிப்புக்கு காலதாமதமாக வருவதற்கு பெயர் போனவர் ஷாருக்கான். நான் எப்பொழுதும் சரியான நேரத்திற்கு வருவதாக நினைக்கிறேன். ஆனால் நான் தாமதமாக வருவதாக மக்கள் நினைக்கிறார்கள் என்கிறார் ஷாருக்.

English summary
Shah Rukh Khan, whose last actor-director collaboration with Rohit Shetty - Chennai Express - chugged away to success, says it's pathetic he can't keep up with the "very punctual" filmmaker, who always reaches the set before the scheduled time.
Please Wait while comments are loading...