பக்ரீத் வாழ்த்து... கடைசி மகன் அப்ராமின் போட்டோவை வெளியிட்டார் ஷாரூக்
மும்பை: பக்ரீத் திருநாளை ஒட்டி தனது ரசிகர்களுக்கு வாழ்த்துக்களோடு தன் கடைசி மகன் அப்ராமின் புகைப்படத்தையும் வெளியிட்டு ஆனந்த அதிர்ச்சி அளித்துள்ளார் ஷாரூக்கான்.
பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாரூக்கானிற்கு ஏற்கனவே ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளார். இந்நிலையில், கடந்தாண்டு வாடகைத் தாய் மூலம் ஒரு ஆண் குழந்தைக்கும் தந்தையானார்.
அக்குழந்தைக்கு ஷாரூக் குடும்பத்தார் அப்ராம் எனப் பெயரிட்டு வளர்த்து வருகின்றனர். மீடியாக்களின் வெளிச்சம் அக்குழந்தையின் மீது படாமல் அவர்கள் பாதுகாத்து வருகின்றனர்.

அப்ராமின் புகைப்படம்...
இந்நிலையில், ஷாரூக்கே தற்போது அக்குழந்தையின் புகைப்படத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். தனது பக்ரீத் திருநாள் வாழ்த்துக்களோடு அப்ராமின் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

வாழ்த்துக்கள்...
இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் ஷாரூக் கூறியிருப்பதாவது, ‘எல்லாருக்கும் என் ஈத் அல் அதா முபாரக் வாழ்த்துக்கள். உங்கள் அனைவருக்கும் வாழ்க்கையின் எல்லா இன்பங்களும் கிடைக்கட்டும்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அப்ராமின் வாழ்த்து...
அதோடு, இந்தக் குழந்தையும் உங்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது எனக் கூறி அப்ராமின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ஷாரூக்.

சர்ச்சை...
இக்குழந்தை கருவில் இருக்கும் போது அதன் பாலினத்தை அறிய முயன்றார் என சர்ச்சையில் சிக்கினார் ஷாருக் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











