ஐ.பி.எல் ஆட்டம் முடிந்தது; அமைதிக்காக புத்தர் நூல்களை வாசிக்கும் ஷாருக்!
கொல்கத்தா: ஐபிஎல் வெற்றிக் கொண்டாட்டங்களுக்குப் பிறகு மன அமைதிக்காக கவுதம புத்தர் நூல்களை வாசிக்கத் தொடங்கியிருக்கிறார் ஷாரூக் கான்.
இதற்காக கவுதம புத்தரின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தினை வாங்கியிருக்கிறாராம் ஷாருக்கான். 7-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரை கொல்கட்டா நைட் ரைடர்ஸ் அணி கைப்பற்றியது. இதற்காக பிரம்மாண்ட வெற்றி விழா கொண்டாடப்பட்டது.

ஆடிப்பாடிய ஷாருக்கான்
ஈடன் கார்டன் மைதானத்தில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கலந்து கொண்ட ஆடம்பரமான விழாவில் ஷாரூக் கான் காற்றில் முத்தங்களை வீசியபடியே, நடனமாடி அசத்தினார்.

லட்சக்கணக்கான ரசிகர்கள்
மைதானத்தில் குவிந்திருந்த சுமார் ஒரு லட்சம் ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார் ஷாருக்கான். மைதானத்திற்கு வெளியேயும் ஆயிரக்கணக்கானோர் கூடிவிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஜூகிசாவ்லா - ஷாருக்கான்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர்களான ஷாருக்கான், ஜூகி ஷாவ்லா இருவரையும் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்திவிட்டது நேற்றைய கொண்டாட்டம்.

புத்தரிடம் சரணடைந்த ஷாருக்
ஆட்டம், பாட்டத்திற்குப்பின்னர் புத்தரிடம் சரணடைந்துள்ளார் ஷாருக். இதை அவரே டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். "கவுதம புத்தர் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகங்கள் சிலவற்றை வாங்கியுள்ளேன், அதனைப் படிப்பதில் மிகுந்த ஆர்வமாக இருக்கிறேன், ஏனெனில் என் மனது அப்போதுதான் சாந்தியடையும்" என்று ட்வீட் செய்துள்ளார் ஷாரூக்.

அன்பு கொண்ட ரசிகர்கள்
தன் மீது இவ்வளவு அன்பு கொண்ட ரசிகர்களுக்கு தன்னால் முடிந்த அளவுக்கு திரும்பக் கொடுக்க தன்னிடம் நீண்டகாலத்திற்கானத் திறமைகள் உள்ளது என்றும் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார் ஷாரூக்.


Click it and Unblock the Notifications











