நயன்தாராவுடன் காதலா?.. வந்து விழுந்த கேள்வி.. டென்ஷனான ஷாருக்கான்.. அப்படி என்ன ஆச்சு?

டெல்லி: பாலிவுட் பாஷா என்று அழைக்கப்படுபவர் ஷாருக்கான். இந்தியா முழுவதும் அவருக்கென்று ரசிகர்கள் ஏராளமாக இருக்கின்றனர். பல வருடங்களாக நடித்துவரும் ஷாருக் இன்றும் ஹிந்தியில் இருக்கும் இளம் ஹீரோக்களுக்கு போட்டியாக வலம் வந்துகொண்டிருக்கிறார். அட்லீ இயக்கத்தில் அவர் நடித்த ஜவான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற சூழலில் அவரிடம் ரசிகர் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

ஷாருக்கான் கடந்த வருடம் பதான், ஜவான், டன்கி ஆகிய படங்களில் நடித்திருந்தார். சித்தார்த் ஆனந்த் இயக்கிய பதான் படத்தில் தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். நான்கு ஆண்டுகளுக்கு பின்பு ஷாருக்கான் நடித்திருந்ததால் அந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் உருவாக்கியது. எதிர்ப்புகளுக்கு இடையில் படமானது கடந்த வருடம் ஜனவரி 25ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. பல எதிர்ப்புகளை சந்தித்தாலும் பதான் படம் 1000 கோடி ரூபாயை வசூலித்து மாஸ் சாதனை படைத்தது. பதான் படத்தின் மாபெரும் வெற்றி ஒட்டுமொத்த பாலிவுட்டையும் ஆச்சரியப்பட வைத்தது. இதனையடுத்து அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்தார் ஷாருக்கான்.

nayanthara shah rukh khan jawaan

முதல் படம்: அட்லீக்கு அது முதல் ஹிந்தி படம் என்பதால் எப்படிப்பட்ட வசூலை எடுத்து விமர்சனத்தை சந்திக்கப்போகிறது என்ற கேள்வி பலரிடமும் எழுந்திருந்தது. படத்துக்கு தமிழ்நாட்டில் சரியான வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் வட மாநிலங்களில் பலத்த வரவேற்பு கிடைத்தது. படமும் ஆயிரம் கோடி ரூபாய்வரை வசூல் செய்து சாதனை படைத்தது. இதனால் ஷாருக்கான், அட்லீ ஆகிய இருவருமே ஹேப்பியில் இருக்கின்றனர்.

அடுத்த படமும் அட்லீ: ஜவான் படத்தில் அட்லீயின் வொர்க்கிங் ஸ்டைல் ஷாருக்கிற்கு ரொம்பவே பிடித்துவிட்டதாக தெரிகிறது. நிச்சயம் அவருடன் இன்னொரு படம் செய்ய வேண்டும் என்ற மூடில் ஷாருக்கான் இருப்பதாகவும்; அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மிக விரைவில் எதிர்பார்க்கலாம் என்று பாலிவுட் வட்டாரத்திலிருந்து தகவல்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றனர். மேலும் அந்தப் படத்துக்கும் ஜவான் டீமையே இறக்கலாம் என்ற ஐடியாவிலும் அவர் இருப்பதாக கூறப்படுகிறது.

ரசிகரின் கேள்வி: இந்நிலையில் சமூக வலைதளத்தில் ஷாருக்கானிடம் ரசிகர் ஒருவர், 'ஜவான் படத்தில் நடித்தபோது நயன்தாராவிடம் ;காதலில் விழுந்தீர்களா' என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஷாருக், 'ஷட் அப். நயன்தாரா இரண்டு குழந்தைகளுக்கு தாய்.. ஹா ஹா' என்று ரிப்ளை கொடுத்திருக்கிறார். அவரது இந்த பதில் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

நயனின் வளர்ச்சி: முன்னதாக ஜவான் நயனுக்கு முதல் ஹிந்தி படமாகும். அந்தப் படத்தின் வெற்றியும், அதில் நயனின் நடிப்பும் அடுத்தடுத்து ஹிந்தி வாய்ப்புகளை அவருக்கு பெற்றுக்கொடுத்திருப்பதாகவும்; விரைவில் அதுகுறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வரலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழைப் பொறுத்தவரை நயன்தாரா இப்போது மண்ணாங்கட்டி என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். மேலும் மலையாளத்திலும் ஒரு படத்தில் கமிட்டாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X