ஷாருக்கானுக்கு கண் ஆபரேஷன்: பயப்படாதீங்க நலமாக உள்ளார்
மும்பை: பாலிவுட் பாதுஷா ஷாருக்கானுக்கு கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
நடிக்க வந்து 22 ஆண்டுகள் ஆகியும் ஷாருக்கான் இன்றும் பிசியாகவே உள்ளார். அவர் படங்கள் தவிர விளம்பர படங்களிலும் நடித்து கை நிறைய இல்லை பை நிறைய இல்லை அதை விட அதிகமாகவே சம்பாதிக்கிறார்.
இந்நிலையில் ஷாருக்கானுக்கு கண்ணில் சிறு பிரச்சனை ஏற்பட்டது.

பார்வை
ஷாருக்கிற்கு கண்ணில் பார்வை கோளாறு ஏற்பட்டது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றனர்.

ஆபரேஷன்
டாக்டர்களின் அறிவுரையை ஏற்று அவர் மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

கண்ணாடி
இனி என்னால் நன்றாக படிக்க முடியும் என்ற ஷாருக் ட்விட்டரில் காமெடியாக கூறியிருப்பதாவது, இது ஒரு ஜோக். மதுவுக்கு எதிரானவர்கள் என்று கூறி உங்களில் சிலர் இதை கண்டுகொள்ள மாட்டீர்கள். தற்போது எனக்கு கிளாஸ் தேவையில் நேரடியாக பாட்டிலில் இருந்தே குடிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

ஹேப்பி நியூ இயர்
ஷாருக் தனது நெருங்கிய தோழியும், இந்தி இயக்குனருமான ஃபரா கானின் ஹேப்பி நியூ இயர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடித்து வருகிறார்.

ஓம் சாந்தி ஓம்
முன்னதாக ஃபரா கான் இயக்கிய ஹிட் படமான ஓம் சாந்தி ஓமில் ஷாருக்கான் ஜோடியாக அறிமுகமானவர் தீபிகா. இதையடுத்து அவர்கள் சென்னை எக்ஸ்பிரஸில் ஜோடி சேர்ந்து நடித்தனர்.

ஹாட்ரிக்?
ஷாருக்கான், தீபிகா ஜோடியாக நடித்த ஓம் சாந்தி ஓம், சென்னை எக்ஸ்பிரஸ் ஆகிய 2 படங்களுமே ஹிட்டாகின. இந்நிலையில் அவர்கள் மூன்றாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ள ஹேப்பி நியூ இயரும் ஹிட்டாகும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications











