9வது ஆபரேஷனுக்குப் பிறகு 6 வாரம் கட்டாய ஓய்வு: ஷாருக்கான்
மும்பை: நேற்று நடிகர் ஷாருக்கானிற்கு தோள் பட்டையில் ஆபரேஷன் வெற்றிகரமாக செய்யப்பட்டது. ஆபரேஷனைத் தொடர்ந்து ஆறு வாரங்கள் ஓய்வெடுக்கச் சொல்லி டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளார்களாம்.
சென்னை எக்ஸ்பிரஸ்' படத்தில் நடித்து வரும் ஷாரூக், சண்டைக் காட்சி ஒன்றில் ஒன்றிப்போய் நடித்தபோது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.
தொடர்ச்சியாக இருந்த படப்பிடிப்புகளால் தள்ளிக்கொண்டே போன ஆபரேஷன் நேற்று வெற்றிகரமாக நடைபெற்றது.

லண்டன் போயி மும்பை...
முதலில் ஆபரேஷன் லண்டனில் செய்யலாம் என முடிவு செய்யப்பட்டது. படப்பிடிப்புகள் வரிசைக்கட்டி நின்றதால், அவரால் லண்டன் போக முடியவில்லை. இதனால், நேற்று அவர் மும்பையில் உள்ள லீலாவதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, தோள்பட்டையில் ஆபரேஷன் செய்து கொண்டார்.

ஷாரூக் பைன்..
ஆபரேஷனுக்குப் பிறகு ஷாரூக் நன்றாக இருப்பதாகவும், ஓரிரு நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் இருந்து விட்டு வீடு திரும்பி விடுவார் என்றும் அவருக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்தார்.

விரைவில் ஷூட்டிங்...
சிறிது ஓய்வுக்குப்பிறகு ஷாரூக் 'சென்னை எக்ஸ்பிரஸ்'மற்றும் 'ஹேப்பி நியூ இயர்' படப்பிடிப்புகளில் கலந்து கொள்வாராம்.

கட்டாய ஓய்வு...
ஆனால், காயம் முழுவதுமாக ஆறும் வரை கடினமான சண்டைக் காட்சிகளில் நடிக்கக்கூடாது என்று டாக்டர்கள் எச்சரித்துள்ளனராம். இது ஷாருக்கானுக்கு 9வது ஆபரேஷன் என்பது குறிப்பிடத்தக்கது.

ரொம்ப சந்தோஷம் ஷாரூக்...
மேலும், லண்டன் செல்லாமல் ஷாரூக் எங்களை நம்பி வந்து, இங்கு ஆபரேஷன் செய்து கொண்டது எங்களுக்கு மிகவும் பெருமையாக உள்ளது' என தெரிவித்துள்ளார் ஆபரேஷன் செய்த டாக்டர் சஞ்சய் தேசாய்.


Click it and Unblock the Notifications











