twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்திய படங்களுக்கு ஏன் ஆஸ்கர் கிடைப்பது இல்லை?: நடிகர் ஷாஹித் கபூர் விளக்கம்

    By Siva
    |

    மும்பை: இந்திய படங்களுக்கு ஆஸ்கர் விருது ஏன் கிடைப்பது இல்லை என்பதற்கான காரணத்தை பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் தெரிவித்துள்ளார்.

    பாலிவுட்டின் சாக்லேட் பாயாக இருந்தவர் ஷாஹித் கபூர். தற்போது வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அவர் தான் நடித்துள்ள ஹைதர் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் பிசியாக உள்ளார்.

    இந்நிலையில் அவர் ஆஸ்கர் விருது பற்றி கூறுகையில்,

    பாலிவுட்

    பாலிவுட்

    நம் திரை உலகம் பெரியது. உலகின் இரண்டாவது பெரிய திரை உலகம் நம்முடையது. ஆனால் நாம் ரசிகர்களை மட்டுமே மனதில் வைத்து படம் எடுக்கிறோம் என்று நினைக்கிறேன்.

    ஹாலிவுட்

    ஹாலிவுட்

    நம் உணர்வுகள் ஹாலிவுட் படங்களில் இருந்து வேறுபட்டது. அதனால் தான் இங்கு நன்றாக ஓடும் படங்கள் சர்வதேச அளவில் ஓடுவது இல்லை.

    ஆஸ்கர்

    ஆஸ்கர்

    ஆஸ்கருக்கு செல்லும் என்று நினைத்து இந்தியாவில் ஒரு படம் பண்ணுவது முட்டாள்தனமாது என்று நினைக்கிறேன். இங்குள்ள ரசிகர்களுக்காகத் தான் நான் படம் பண்ணுவேன்.

    விருது

    விருது

    நான் நடித்துள்ள படத்தை எங்கோ விருதுக்கு பரிந்துரைப்பார்கள் என்று நடிக்கவில்லை. இந்த நாட்டு மக்கள் விரும்ப வேண்டும் என்று நினைத்து நடிக்கிறேன்.

    சில நேரம்

    சில நேரம்

    சிலநேரம் எதிர்பார்க்காத சில படங்கள் ஆஸ்கருக்கு தேர்வாகும். காரணம் அதை எடுத்தவர்கள் இந்த படத்தை என் நாட்டு ரசிகர்கள் விரும்புவார்களா என்ற கவலையில் எடுக்கவில்லை. அவர்கள் ஏதாவது புதிதாக செயய் நினைத்து செய்வார்கள் என்றார் ஷாஹித்.

    English summary
    Shahid Kapoor has given an explanation as to why Indian films don't make it to the Oscars.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X