’கல்யாணம் ஆகி குழந்தைகள் இருக்கும்போது… ச்சை..’ பத்மாவதி நடிகரை கழுவி ஊத்திய நெட்டிசன்ஸ்
மும்பை: ஷாகித் கபூர் லிப்லாக் செய்த காட்சிகள் வைரலாகி வருகிறது.
பாலிவுட் நடிகர் ஷாகித் கபூருக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடிய அவர் கொண்டாட்டத்தின் உச்சமாக எடுத்த புகைப்படம்தான் தற்போது இணையத்தில் வைரலாகிறது.

பண்டிகைக் கொண்டாத்தில் தன் மனைவி மீரா கபூரை கட்டியணைத்து முத்தம் கொடுத்திருக்கிறார். அந்த புகைப்படத்தை அவரின் மனைவி மீரா கபூர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து காதல் மட்டும்தான் என பதிவிட்டுள்ளார்.
இதை பார்க்கும் போது ஏதோ திரைப்படத்தில் வரும் லிப்லாக் காட்சி போல இருப்பதால் பலரும் வைரலாக பகிர்ந்து வருகின்றனர். அதே நேரத்தில் திருமணமாகி குழந்தைகள் இருக்கும்போது இப்படியா புகைப்படத்தை பதிவிடுவது ச்சை... என பல ஒழுக்க சீலர்கள் கடிந்துகொள்கின்றனர். அவர் மனைவிக்கு அவர் கொடுத்தார் அதுல என்ன தப்பு? என ஆதரவு குரலையும் கேட்க முடிகிறது.
பத்மாவதி படத்தில் ராஜா ரத்தன் சிங் ஆக நடித்த ஷாகித் கபூர், தற்போது அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்து வருகிறார். தெலுங்கில் இப்படத்தை இயக்கிய சந்தீப் வங்கா இந்தியிலும் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications