சாயங்காலம் சாவகாசமாக ஓட்டு போட்ட ஷாருக்கான், சிம்பு
சென்னை: பாலிவுட் நடிகர் ஷாருக்கான், சிம்பு ஆகியோர் மாலை வேளையில் வாக்களித்துள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவில் திரை உலக பிரபலங்கள் காலை முதலே வாக்களித்தனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் ஆளாக சென்று காலை 7 மணிக்கே வாக்களித்துவிட்டார். அதன் பிறகு நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள், பாடல் ஆசிரியர்கள் என்று பிரபலங்கள் வரிசையாக வாக்களித்தனர்.
நடிகர் சிம்பு வெயிலின் தாக்கம் குறைந்த பிறகு மாலை வேளையில் சென்று வாக்களித்தார். இதே போன்று பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், நடிகைகள் ஜெயா பச்சன், ஐஸ்வர்யா ராய் பச்சன் ஆகியோரும் 5 மணிக்கு மேல் சென்று வாக்களித்தனர்.

கமல் ஹாஸன் வாக்களிப்பதற்காக உத்தம வில்லன் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு சென்னைக்கு வந்து வாக்களித்தார். வாக்களித்த கையோடு அவர் விமானம் மூலம் பெங்களூர் சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











