கிங் ஆஃப் பாலிவுட்...ஷாருக்கின் 29 வருட சினிமா பயணம்
மும்பை : உலக அளவில் புகழ்பெற்ற பாலிவுட் நடிகராக தற்போது வரை இருந்து வருபவர் ஷாருக்கான். கிங் ஆஃப் பாலிவுட், பாலிவுட் பாட்ஷா என புகழும் அளவிற்கு பல ஆண்டுகளாக புகழின் உச்சத்தில் இருந்து வருகிறார்.
இவர் முதன் முதலில் நடித்த தீவானா படம் ரிலீசாகி 29 ஆண்டுகள் ஆகி விட்டது. இந்த சந்தோஷமான தகவலை ஷாருக்கான் தனது ரசிகர்களுடன் ட்விட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளார். இதனை ஷாருக்கானின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

உங்களுக்காக நடிக்கிறேன்
ட்விட்டரில் ஷாருக்கான், இப்போதும் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். ஏறக்குறைய 30 ஆண்டுகள் என் மீது அளவு கடந்த அன்பை பொழிந்து கொண்டிருக்கிறீர்கள். இதை புரிந்து கொண்டு தான் உங்களை மகிழ்விக்க தொடர்ந்து நடித்து வருகிறேன்.

அன்புக்கு நன்றி
இது எனது பாதி வாழ்க்கைக்கும் மேலானது என்பது உணர்கிறேன். உங்களுக்காக நேரம் ஒதுக்கி அன்பை பகிர்ந்து கொள்வேன். உங்களின் அன்பிற்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

3 ஆண்டுகளுக்கு பின் பிஸி
2018 க்கு பிறகு ஷாருக்கான் நடித்த படங்கள் எதுவும் வெளிவரவில்லை. இருந்தாலும் அவரின் படங்கள் எப்போது வரும் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தற்போது பதான் படத்தின் வேலைகளில் ஷாருக் பிஸியாக இருந்து வருகிறார்.

அட்லீயுடன் விரைவில் கூட்டணி
கொரோனாவால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த படத்தின் படப்பிடிப்பு, மும்பையில் உள்ள யுஆர்ஃப் ஸ்டூடியோசில் விரைவில் மீண்டும் துவங்க உள்ளது. இதைத் தொடர்ந்து அட்லீ இயக்கும் படத்தில் ஷாருக்கான் நடிக்க உள்ளார்.


Click it and Unblock the Notifications











