லண்டனுக்கு ஷூட்டிங் சென்ற ஷாருக் கானிடம் போலீஸார் திடீர் விசாரணை!

By Sudha

Sharukh Khan
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானிடம், லண்டன் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

யாஷ் சோப்ராவின் புதிய படத்தில் ஷாருக் கான் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக காத்ரீனா கைப் மற்றும் அனுஷ்கா சர்மா ஆகியோரும் நடிக்கிறார்கள். படப்பிடிப்பு தற்போது லண்டனில் நடந்து வருகிறது.

இந்த நிலையில், ஷாருக் கானிடம், லண்டன் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால் இதில் எந்த பரபரப்பும் இல்லை என்று கூறப்படுகிறது. அதாவது படம் குறித்த எந்தத் தகவலும், புகைப்படமும் வெளியாகி விடக் கூடாது என்று படக் குழுவினர் கவனமாக உள்ளனராம். இதற்காக, பாதுகாப்பு கோரி லண்டன் போலீஸாரை அணுகியுள்ளனர். இதையடுத்து லண்டன் போலீஸார் பாதுகாப்பு கொடுத்து வருகின்றனராம். அதன் ஒரு கட்டமாகவே ஷாருக் கானையும் விசாரித்துள்ளனராம். ஆனால் அவர்தான் படத்தின் ஹீரோ என்று தெரிய வந்து பிறகு விட்டு விட்டார்களாம்.

இதற்கு முன்பு நியூயார்க் விமான நிலையத்தி்ல ஷாருக் கானை பல மணி நேரம் போலீஸார் விசாரித்தது பெரும் பரபரப்பானது. அவரது பெயரில் கான் என்று இருந்ததால் இந்த விசாரணை நடந்தது. இப்போது லண்டன் போலீஸார் பீதியை ஏற்படுத்தியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X