Shahrukh Khan - 35 ஆண்டுகள்.. ஹாலிவுட் படத்தில் நடிக்கப்போகிறாரா ஷாருக்கான்?.. அவரே சொன்ன சூப்பர் விஷயம்

மும்பை: ஷாருக்கான், டாப்ஸி உள்ளிட்டோர் நடித்து ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் உருவான படம் டன்கி. இப்படம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் வெளியானது. பெரும் எதிர்பார்ப்போடு வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. ஷாருக்கானுக்கு இப்படம் ஹாட்ரிக் வெற்றியை கொடுத்திருப்பதாகவே பலரும் கூறினார்கள். இந்தச் சூழலில் துபாயில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஷாருக்கான் பேசியிருக்கும் விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

பாலிவுட் பாஷா என்று அழைக்கப்படுபவர் ஷாருக்கான். இந்தியா முழுவதும் அவருக்கென்று ரசிகர்கள் ஏராளமாக இருக்கின்றனர். பல வருடங்களாக நடித்துவரும் ஷாருக் இன்றும் ஹிந்தியில் இருக்கும் இளம் ஹீரோக்களுக்கு போட்டியாக வலம் வந்துகொண்டிருக்கிறார். அதுமட்டுமின்றி உலகத்தின் செல்வாக்கு மிகுந்த நபர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தும் அசத்தியது குறிப்பிடத்தக்கது.

Shahrukh Khan Will Act in Hollywood Movie Here are the full Details

பதான் படம்: இவர் கடந்த வருடம் பதான் படத்தில் நடித்திருந்தார். நான்கு ஆண்டுகளுக்கு பின் ஷாருக்கான் நடித்திருக்கும் படம் பதான். சித்தார்த் ஆனந்த் இயக்கிய இந்தப் படத்தில் தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். நான்கு ஆண்டுகளுக்கு பின்பு ஷாருக்கான் நடித்திருப்பதால் இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் உருவாக்கியது.

எதிர்ப்பு வந்தாலும் 1000 கோடி ரூபாய் வசூல்: படத்தின் சிங்கிள் பாடல் வெளியானபோது அதில் தீபிகா படுகோன் அணிந்திருந்த உடையை வைத்து ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் பலரும் படத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். எதிர்ப்புகளுக்கு இடையில் படமானது கடந்த வருடம் ஜனவரி 25ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. பல எதிர்ப்புகளை சந்தித்தாலும் பதான் படம் 1000 கோடி ரூபாயை வசூலித்து மாஸ் சாதனை படைத்தது.

ஜவான்: பதான் படத்தின் மாபெரும் வெற்றி ஒட்டுமொத்த பாலிவுட்டையும் ஆச்சரியப்பட வைத்தது. இதனையடுத்து அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்தார் ஷாருக்கான். அட்லீக்கு அது முதல் ஹிந்தி படம் என்பதால் எப்படிப்பட்ட வசூலை எடுத்து விமர்சனத்தை சந்திக்கப்போகிறது என்ற கேள்வி பலரிடமும் எழுந்திருந்தது. படத்துக்கு தமிழ்நாட்டில் சரியான வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் வட மாநிலங்களில் பலத்த வரவேற்பு கிடைத்தது. படமும் ஆயிரம் கோடி ரூபாய்வரை வசூல் செய்து சாதனை படைத்தது. இதனால் ஷாருக்கான், அட்லீ ஆகிய இருவருமே ஹேப்பியில் இருக்கின்றனர்.

டன்கி: இப்படி கடந்த வருடம் வரிசையாக ஷாருக்கானுக்கு இரண்டு மெகா ஹிட் படங்கள் அமைந்துவிட்டன. இந்தச் சூழலில்தான் கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஷாருக்கான் நடிப்பில் மூன்றாவது படமாக டன்கி வெளியானது. ராஜ்குமார் ஹிரானி இயக்கியிருந்த அந்தப் படத்தில் ஷாருக்குடன் டாப்ஸி உள்ளிட்டோர் நடித்திருந்தனார். படத்துக்கு நல்ல வரவேற்பே கிடைத்தது. மேலும் 470 கோடி ரூபாய்வரை வசூல் செய்ததாகவும் கூறப்படுகிறது. அந்தப் படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியிலும் வெளியாகியிருக்கிறது.

ஷாருக்கான் சொன்ன விஷயம்: இந்நிலையில் துபாயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார் ஷாருக்கான். அப்போது பேசிய அவர், "எனது கரியரை முடித்துக்கொள்ள விரும்புகிறேன். ஆனால் இப்போதைக்கு அது முடியாது. அது முடிவதற்கு இன்னும் 35 ஆண்டுகள் இருக்கின்றன. அதேபோல் மொத்த உலகமும் விரும்பும் படத்தில் நடிப்பதற்கு நான் விரும்புகிறேன். அதற்கு பிறகு என்னை பார்த்து நீங்கள் ஏன் ஹாலிவுட் படத்தில் நடிக்கவில்லை என்று யாரும் கேட்கக்கூடாது. நான் நடிக்கும் அந்தப் படம் அனைத்து எல்லைகளையும் தாண்டி செல்ல வேண்டும்" என்றார். இதனை பார்த்த ரசிகர்கள் ஹாலிவுட் படத்தில் நடிக்க ஷாருக் கமிட்டாகிவிட்டாரோ என்று சமூக வலைதளங்களில் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X