இந்தியாவிலேயே ரஜினிகாந்த் போல சூப்பர் ஸ்டார் வேற யாருமில்லை.. ’சக்திமான்’ முகேஷ் கண்ணா ஓபன் டாக்!

சென்னை: தூர்தர்ஷனில் ஒளிபரப்பான சக்திமான் தொடரை பார்த்த பின்னர் தான் 90ஸ் கிட்ஸ்களுக்கு சூப்பர் ஹீரோக்கள் படங்களின் மீதே ஆர்வம் வந்திருக்கும் என்று சொன்னால் அது மிகையாகாது. தமிழ்நாட்டிலும் பல குழந்தைகள் சக்திமான் வந்து காப்பாத்துவார் என மாடியில் இருந்து கீழே விழுந்த அசம்பாவிதங்களும் நடந்து தன்னை ரொம்பவே வேதனைப்படுத்தியதாக நடிகர் முகேஷ் கண்ணா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி அவர் சிலாகித்து பேசிய பேட்டி பிரபல யூடியூப் சேனல் ஒன்றில் தற்போது வெளியாகியுள்ள நிலையில், அதனை ரஜினிகாந்த் ரசிகர்கள் பலரும் ஷேர் செய்து வருகின்றனர். ரஜினிகாந்தை போலவே முகேஷ் கண்ணாவும் ஆன்மிகவாதி என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

Shaktimaan Actor Mukesh Khanna says Rajinikanth is the only one Super Star in India

சக்திமான் தொடரை எப்படியாவது படமாக்க வேண்டும் என பல ஆண்டுகளாக போராடி வருகிறார் முகேஷ் கண்ணா. ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் கேமியோ ரோலில் நடிக்கப் போறீங்களா என்கிற கேள்விக்கும் அவர் பதில் அளித்துள்ளார்.

மார்ஷல் முதல் பீஷ்மர் வரை: முகேஷ் கண்ணா என்றதுமே பலருக்கும் அவரை சக்திமான் தொடரில் நடித்தவராகத்தான் தெரியும். ஆனால், அதற்கு முன்பாக்வே அவர் நடித்த மகாபாரதம் மற்றும் மார்ஷல் நெடுந்தொடர் எல்லாமே 90ஸ் கிட்ஸ் தூர்தர்ஷனில் தமிழ் டப்பிங்கிலேயே பார்த்து ரசித்தனர். மகாபாரதம் சீரியலில் தேவ விரதன் எனும் பீஷ்மர் கதாபாத்திரத்தில் அவர் நடித்ததை எல்லாம் ரசிகர்கள் என்றுமே மறக்கமாட்டார்கள்.

சக்திமான்: சின்னத்திரையின் சூப்பர் ஸ்டாராகவே முகேஷ் கண்ணாவை மாற்றியது சக்திமான் தொடர் தான். அதில், வித்யாதர் மாயாதர் கங்காதர் ஓம்கார் சாஷ்த்ரி என வல்லவன் பல்லன் சிம்பு போல அவர் பத்திரிகையாளராக வந்து காமெடி செய்வதும் அதன் பின்னர், சக்திமானாக மாறி இருள் அரக்கனின் ஆட்களை அழித்து துவம்சம் செய்வதும் என நடித்து ஏகப்பட்ட ரசிகர்களின் சூப்பர் ஹீரோவாகவே மாறிவிட்டார்.

ரஜினிகாந்த் போல யாருமில்லை: எந்தவொரு சூப்பர் ஸ்டார் நடிகராக இருந்தாலும் மக்கள் மத்தியில் இதுதான் என்னோட ரியாலிட்டி என தலையில் டோப்போ வைத்துக் கொள்ளாமல், விலையுயர்ந்த கோட் சூட் அணிந்துக் கொள்ளாமல் எளிமையாக அவர் ரசிகர்களை பார்த்து இரு கைகளையும் உயர்த்தி வணங்குவதை பார்த்தாலே இந்தளவுக்கு எந்தவொரு சூப்பர் ஸ்டாரும் இந்தியாவில் இருக்கவே வாய்ப்பில்லை என்று தான் எனக்கு தோன்றியது.

வீட்டிலேயே கோயில்: நடிகர் ரஜினிகாந்த் பாபாஜியை வணங்கி வருகிறார். அவரது ஆன்மிகம் எனக்கு ரொம்பவே பிடிக்கும். என்னுடைய வீட்டிலும் கோயில் ஒன்றை கட்டி வைத்திருக்கிறேன் தினமும் காலையில் எழுந்ததும் சாமியை வணங்கிவிட்டுத்தான் மற்ற வேலைகளில் ஈடுபடுவேன் என முகேஷ் கண்ணா பேசியுள்ளார்.

ரஜினியை பார்த்தது கிடையாது: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இன்று வரை நான் பார்த்தது கிடையாது. ஆனால், அவருடைய ரசிகன் நான். எனக்கு அவரை ரொம்பவே பிடிக்கும் என்றார். ஜெயிலர் 2 படத்தில் கேமியோ ரோலில் நீங்க நடிக்க வாய்ப்பு வந்தால் நடிப்பீர்களா என்கிற கேள்விக்கு, கண்டிப்பாக அப்படியொரு வாய்ப்பு கிடைத்தால் மிஸ் செய்யவே மாட்டேன் என சக்திமான் நடிகர் முகேஷ் கண்ணா பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X