அட செம.. அஜித் பிறந்தநாளுக்கு ஷாலினி கொடுத்த காஸ்ட்லி கிஃப்ட்.. மாஸாக போஸ் கொடுத்த அஜித்
சென்னை: அஜித்தும், ஷாலினியும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். கடந்த 2000ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள். கோலிவுட்டின் சிறந்த ஜோடி என்ற பெயர் பெற்ற அஜித் - ஷாலினிக்கு அனௌஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் இருக்கிறார்கள். அஜித் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். தனது குடும்பத்தினர் மீது அளவுக்கடந்த பாசம் வைத்திருப்பவர் அவர். இந்தச் சூழலில் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு ஷாலினி கிஃப்ட் கொடுத்ததாக கூறப்படும் பைக்கில் அஜித் கொடுத்திருக்கும் போஸ் ட்ரெண்டாகியுள்ளது.
சரண் இயக்கத்தில் அமர்க்களம் படத்தில் அஜித்தும், ஷாலினியும் இணைந்து நடித்தனர். அந்தப் படத்தில் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது. அதனையடுத்து இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு அனௌஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் இருக்கின்றனர். கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடி என்றால் அது அஜித்தும், ஷாலினியும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

பதறிய அஜித்குமார்: அமர்க்களம் படத்தில் கத்தியை வைத்து ஷாலினியை அஜித் மிரட்டுவது போன்று ஒரு காட்சி இருக்கும். அந்தக் காட்சியில் நடித்துக்கொண்டிருக்கும்போது உண்மையாகவே கத்தி ஷாலினியின் கையை கீறிவிட்டது. இதனால் பதறிப்போன அஜித்குமார் உடனே முதலுதவி செய்தார். அன்றைய தின ஷூட்டிங் முடிந்த பிறகு பொக்கே அனுப்பி நலம் விசாரித்தார் அஜித்.
சீக்கிரம் ஷூட்டிங்க முடிங்க சரண்: அதனைத் தொடர்ந்து ஒருமுறை சரண், ஷாலினி, அஜித் மூன்று பேரும் அமர்ந்திருக்க, 'சரண் சீக்கிரம் ஷூட்டிங்க முடிச்சிடுங்க இல்லைனா நான் ஷாலினிய லவ் பண்ணிடுவேன் போல' என போட்டு உடைத்திருக்கிறார் அஜித். அப்போதுதான் அஜித்துக்குள் காதல் இருப்பதை ஷாலினி லேசாக உணர்ந்திருக்கிறார்.
காதலை சொன்ன அஜித்: தொடர்ந்து ஷூட்டிங் போய்க்கொண்டிருந்தபோது ஒருகட்டத்தில் ஷாலினியிடம் அஜித் காதலை சொல்லிவிட்டார். உள்ளுக்குள் அஜித் மீது ஷாலினிக்கு ஆசை இருந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் தனது அப்பாவிடம் பேச சொன்னார் ஷாலினி. அதேசமயம் அஜித் பேசுவதற்கு முன்பாகவே ஷாலினியே தனது தந்தையிடம் பேசியிருந்தார். அதனையடுத்து அஜித்தும் நேரடியாக ஷாலினி தந்தையிடம் பேச அவரும் ஒத்துக்கொண்டார். இதனையடுத்து இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2000ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
ஷாலினி கொடுத்த கிஃப்ட்: இந்தச் சூழலில் அஜித் தனது 53ஆவது பிறந்தநாளை கடந்த ஒன்றாம் தேதி கொண்டாடினார். அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். ஷாலினி காஸ்ட்லியான கிஃப்ட் ஒன்றை கொடுத்திருப்பதாக கூறப்பட்டது. அதாவது அஜித்துக்கு பைக் என்றால் பயங்கர பிரியம் என்பது அனைவரும் அறிந்ததே. எனவே ஷாலினி பைக் ஒன்றை அஜித்துக்கு கிஃப்ட் செய்ததாக தகவல் வெளியானது. அந்த பைக் டுகாட்டி ரகத்தை சேர்ந்தது. இதன் விலை சுமார் 25 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது.
ஸ்டைல் அஜித்: அந்த பைக்கில் அஜித் ஸ்டைலாக அமர்ந்து போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம் ஷாலினி பெயரில் இருக்கும் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டிருக்கிறது. இதற்கிடையே அஜித் இப்போது விடாமுயற்சி படத்தி நடித்துவருகிறார். அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க கமிட்டாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











