Ajith - அஜித் எப்படி இருக்கிறார் தெரியுமா?.. ஷாலினி போட்ட இன்ஸ்டா போஸ்ட்.. ரசிகர்கள் நிம்மதி

சென்னை: நடிகர் அஜித்குமார் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். படத்தின் முதல் ஷெட்யூல் ஷூட்டிங் அஜர்பைஜானில் நடந்து முடிந்தது. இதனையடுத்து ரெஸ்ட்டில் இருந்த அவர் சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்ததைத் தொடர்ந்து நலமுடன் வீடு திரும்பினார். இந்தச் சூழலில் அஜித்தின் மனைவி ஷாலினி போட்டிருக்கும் இன்ஸ்டா பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அந்த வெற்றி கொடுத்த உற்சாகத்துடன் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் கமிட்டானார் அஜித்குமார். லைகா நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த வருடம் மே மாதம் படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டதோடு வேறு எந்த அப்டேட்டையும் கொடுக்காமல் இருக்கிறது படக்குழு. இதனால் ஏகே ரசிகர்கள் ரொம்பவே வருத்தப்பட்டுக்கொண்டனர்.

Shalini Shares Latest Ajith photo at her instagram

அஜர்பைஜானில் ஷூட்டிங்: முறையான அப்டேட்டுகள் எதுவும் வராவிட்டாலும் படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் தொடங்கியது. இதில் அஜித், திரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகின. அப்டேட்டுகள் வரவில்லை என்றாலும் ஷூட்டிங்காவது தொடங்கிவிட்டதே என்று நிம்மதி பெருமூச்சு விட்டனர் ரசிகர்கள். ஒருவழியாக ஷூட்டிங்கின் முதல் ஷெட்யூலும் முடிந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தது.

அடுத்தக்கட்ட ஷூட்டிங்: சில மாதங்களுக்கு முன்பு அந்த அறிவிப்பு வெளியானது. ஆனால் அடுத்தக்கட்ட ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்பது குறித்து இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை. அநேகமாக அடுத்த மாதம் ஷூட்டிங் தொடங்கும் என்று கூறப்பட்டது. அதேசமயம் லைகா நிறுவனம் இப்போது கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பதால் விடாமுயற்சி ஷூட்டிங்கை தள்ளி வைக்க திட்டமிட்டிருப்பதாக ஒரு பேச்சு ஓடியது. இதனால் அஜித் ரசிகர்கள் சோர்வடைந்தனர்.

அறுவை சிகிச்சை: நிலைமை இப்படி இருக்க திடீரென சமீபத்தில் அஜித்குமார் தனது உடலை முழு பரிசோதனை செய்வதற்காக அப்போலோ மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவருக்கு சோதனை செய்யப்பட்டபோது அவரது மூளையிலிருந்து காதுக்கு செல்லும் நரம்பில் சிறிய வீக்கம் இருந்தது கண்டறியப்பட்டது. அதனையடுத்து அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. அஜித்துக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதுதான் சில நாட்களுக்கு முன்பு ஹாட் டாபிக்காக இருந்தது.

வீடு திரும்பிய அஜித்: ஏகேவுக்கு ஆபரேஷன் என்றதும் அவரது ரசிகர்கள் துடித்துப்போயினர். அவருக்கு என்ன ஆகிவிட்டதோ என்று பதற்றமடைந்தனர். ஆனால் அஜித் தரப்பிலிருந்து ஆரம்பத்தில் முறையான விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை. தொடர்ந்து அவரது பிஆர்ஓ சுரேஷ் சந்திரா, அறுவை சிகிச்சை முடிந்த அடுத்த நாள் அஜித் நலமுடன் வீடு திரும்பிவிட்டதாக கூறியிருந்தார். இதனால் ரசிகர்கள் நிம்மதியடைந்தனர். இருந்தாலும் அவர்களுக்குள் ஒரு கவலை இருந்துகொண்டே இருந்தது.

ஷாலினி போஸ்ட்: அதாவது அஜித் வீடு திரும்பிவிட்டார் சரி ஆனால் எப்படி இருக்கிறார் என்று தெரியவில்லையே என்று குழப்பமடைந்திருந்தனர். சூழல் இப்படி இருக்க ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அஜித்தும், அவரது மகன் ஆத்விக்கும் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து உங்களால் வெல்ல முடியாது என்று நம்மிடம் சொல்லக்கூடிய ஒரே ஆள் நாம்தான் என்று குறிப்பிட்டிருக்கிறார். அந்தப் புகைப்படத்தில் அஜித் தனது மகன் ஆத்விக்கிற்கு ஷூ போட்டுவிட்டுக்கொண்டிருக்கிறார். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அட அஜித் நார்மல் ஆகிட்டார் போலயே என்று நிம்மதியடைந்தாலும்; இது அறுவை சிகிச்சைக்கு முன்னர் எடுத்த புகைப்படமா இல்லை பின்னர் எடுத்த புகைப்படமா என்றும் கேள்வி எழுப்பிவருவதும் குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X