கமலுடன் நடிக்கிறாரா சிம்பு? இந்தியன் 2 பற்றி புதிய தகவல்
Recommended Video

சென்னை: இந்தியன் 2 திரைப்படத்தில் சிம்பு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஷங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ள திரைப்படம் இந்தியன் 2. இத்திரைப்படத்தில் துல்கர் சல்மான் நடிப்பதாக சொல்லப்படும் நிலையில், நடிகர் சிம்புவும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிம்பு ரசிகர்களுக்கு 2019 மிகச் சிறந்த ஆண்டாக இருக்கப் போகிறது என்பதை ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். வந்தா ராஜாவாதான் வருவேன், மாநாடு, கௌதம் மேனனுடன் கூட்டணி என கலக்கப் போகிறார்.
இந்த நிலையில், இந்தியன் 2 படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சிம்புவை நடிக்க வைக்க படக்குழு அணுகியதாகவும், கமல்ஹாசனை குருவாக நினைப்பதால் சிம்பு அதற்கு ஒத்துக்கொள்வார் என்று படக்குழு நம்பிக்கையோடு இருப்பதாகவும் தகவல் பரவுகிறது.
இந்தியன் 2 திரைப்படத்தில் நெடுமுடி வேணு, துல்கர் சல்மான் ஆகியோர் உள்ளனர் என்பது தெரிந்த விஷயம். இப்படத்தின் நடிகர்கள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் ஓரிரு வாரங்களில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
இந்தியன் 2 திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். லைகா புரடக்ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.


Click it and Unblock the Notifications











