ஆர்யாவுக்காக ஒல்லியா, சிவப்பா இருக்கிற பெண்ணைத் தேடுகிறேன் - ஷாம்

By Shankar

ஆர்யாவுக்காக சிவப்பாக, ஒல்லியாக உள்ள பெண்ணைத் தேடிக் கொண்டிருக்கிறாராம் சக நடிகர் ஷாம். வேறொன்றுமில்லை... திருமணத்துக்காகத்தான்!

ஆர்யாவும், ஷாமும் 'உள்ளம் கேட்குமே' என்ற படத்தில் இணைந்து நடித்தார்கள். அதன் பிறகு இப்போதுதானி எஸ்.பி.ஜனநாதன் டைரக்ஷனில், 'புறம்போக்கு' என்ற படத்தில் இணைந்து நடிக்கிறார்கள்.

இதில், இன்னொரு கதாநாயகனாக விஜய் சேதுபதியும் நடிக்கிறார்.

பாலிவுட் கலாச்சாரம்

பாலிவுட் கலாச்சாரம்

இந்தப் படம் குறித்து ஷாம் கூறுகையில், "இந்தி பட உலகில், நான்கு அல்லது ஐந்து கதாநாயகர்கள் இணைந்து நடிக்கிறார்கள். தமிழ் பட உலகில் இப்போதுதான் அந்த கலாசாரம் ஆரம்பித்து இருக்கிறது. ‘புறம்போக்கு' ஒரு புதுவிதமான கதை. டைரக்டர் ஜனநாதன் இயக்கத்தில், ‘இயற்கை' படத்தில் ஏற்கனவே நடித்திருக்கிறேன். சமீபத்தில் அவர் என்னிடம் 6 கதைகள் சொன்னார். அதில் பிடித்த கதை இது.

ஆரோக்கிய போட்டி

ஆரோக்கிய போட்டி

‘புறம்போக்கு' படத்தில், மூன்று பேருக்குமே சமமான கதாபாத்திரங்கள். எங்களுக்குள் போட்டி இருந்தாலும், அது ஆரோக்கியமான போட்டியாகவே இருக்கும். நானும், ஆர்யாவும் ‘உள்ளம் கேட்குமே' படத்தில் ஏற்கனவே இணைந்து நடித்து இருக்கிறோம்.

அகம்பாவம் இல்லை

அகம்பாவம் இல்லை

இது, எங்களுக்கு இரண்டாவது படம். முதல் படத்தில் ஏற்பட்ட நட்பு, இன்னும் வளர்ந்து இருக்கிறது. ஆர்யா இப்போது இருப்பது, பெரிய இடம். என்றாலும் நாம் பெரிய கதாநாயகன் என்ற அகம்பாவம் அவனுக்கு இல்லை. அவன், எனக்கு தம்பி மாதிரி.

யாரை கல்யாணம் பண்ணிக்கப் போற ஆர்யா?

யாரை கல்யாணம் பண்ணிக்கப் போற ஆர்யா?

வாடா, போடா என்றுதான் பேசும் அளவுக்கு நாங்கள் நெருக்கமானவர்கள். ‘உள்ளம் கேட்குமே' படத்தில் நடித்தபோதே இருவரும் நல்ல பழக்கம். அவன் வீட்டில் போய் சாப்பிட்டு இருக்கிறேன். அந்த உரிமையுடன், ‘‘யாரடா நீ கல்யாணம் பண்ணிக்கப்போறே?'' என்று கேட்டேன்.

பெண் தேடுகிறேன்

பெண் தேடுகிறேன்

‘‘ஷாம் பாய், எப்போது வேண்டுமானாலும் கல்யாணம் பண்ணிக்கலாம்... அதுக்கு என்ன அவசரம்?'' என்றான்.

இப்போது ஆர்யாவுக்காக நானே நிறைய இடங்களில் பெண் தேடிக்கொண்டிருக்கிறேன். அவனுக்கு ஒல்லியாக-சிவப்பாக-அழகான பெண்தான் பிடிக்கும். அப்படி ஒரு பெண்ணைத் தேடி வருகிறேன்,'' என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X