ஹீரோ .. ஹீரோ ..

By Staff

மும்பையைச் சேர்ந்த தன் காதலி காஷிஸை திருமணம் செய்து கொண்டார் நடிகர் ஷாம். இஸ்லாமிய முறைப்படிஅவர்களுடைய திருமணம் நடந்தது.

மதுரையைச் சேர்ந்த ஷாமின் இயற்பெயர் ஷம்சுதீன் இப்ராகிம். பெங்களூரிலேயே வளர்ந்த ஷாம், அங்குள்ளசெயின்ட் ஜோசப் கல்லூரியில் பி.காம் படித்தார்.

கல்லூரியில் படிக்கும்போதே காஷிஸ் என்ற மாணவியை ஷாம் தீவிரமாகக் காதலித்தார். பின்னர் மாடலிங்செய்வதற்கு சான்ஸ் கிடைக்கவே, படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு மும்பை போனார் ஷாம்.

இதற்கிடையே காஷிஸும் படிப்பை முடித்து விட்டு மும்பை செல்லவே, அங்கும் அவர்களுடைய காதல்தொடர்ந்தது.

தமிழ் பட வாய்ப்புகள் கிடைத்து ஷாம் சென்னை வந்த போதிலும், காதம் மட்டும் ஜரூராகத் தொடர்ந்தது. சுமார் 7ஆண்டுகளாக இருவருமே தங்கள் வீட்டினரிடம் இவ்விஷயத்தை மறைத்து விட்டனர்.

இந்நிலையில் ஷாமுடைய அண்ணன் திருமணம் சமீபத்தில் முடிந்ததும், இவருக்கும் பெண் பார்க்க ஆரம்பித்தனர்.இதையடுத்துதான் ஷாம் தன் காதல் விஷயத்தை வீட்டில் போட்டு உடைத்தார். அவர்களும் இதற்கு எதிர்ப்புதெரிவிக்கவில்லை.

காஷிஸ் வீட்டிலும் ஓ.கே. சொல்லவே, இரு வீட்டினரும் பேசி ஷாம்-காஷிஸ் திருணத்தை நடத்த முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று (டிசம்பர் 15ம் தேதி) சென்னை ஷெனாய் நகரில் உள்ள ஷாமின் வீட்டில் திருமணம்நடைபெற்றது. இஸ்லாமிய சம்பிரதாயப்படி எளிய முறையில் திருமணம் நடைபெற்றது.

நேற்று மாலையிலேயே "கிண்டி லீ மெரிடியன்" ஹோட்டலில் திரையுலகினர் கலந்து கொண்ட ஷாம்-காஷிஸ்தம்பதியின் பிரம்மாண்டமான திருமண வரவேற்பும் நடைபெற்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X