ஹீரோ .. ஹீரோ ..
விஜய் முடிவெடுத்து விட்டார். அதாவது, இனிமேல் தரமான கதை, தரமான டைரக்டர்களின் படங்களில்மட்டுமே நடிப்பது என்று.
புதிய கீதை அவருக்குக் கற்றுக் கொடுத்துள்ள பாடமாம் இது. ஒவ்வொரு படத்திலும் ஒருசெய்தியை கொடுக்க வேண்டும் என்றும் விஜய் முடிவெடுத்துள்ளாராம். நல்ல கதையுடன் வந்தால்மட்டுமே இனிமே இயக்குனர்களுக்கு வாய்ப்பு தருவது என்ற முடிவையும் அவர் எடுத்துள்ளாராம்.
புதிய கீதை படத்துக்கு ஆங்காங்கே சிலர் எதிர்ப்பு தெரிவித்தாலும் படத்திற்கு நல்ல வரவேற்புகிடைத்துள்ளது. தியேட்டர்களில் நல்ல கூட்டம் கூடுகிறது. நீண்ட நாட்களாக ஒரு வெற்றிப்படத்துக்காக ஏங்கிக் கொண்டிருந்த விஜய்க்கு இது பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளதாம்.
விஜய் தற்போது கவிதாலயாவின் தயாரிப்பான திருமலையில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதைமுடித்த பின் தெலுங்கு சூப்பர் ஹிட் படமான ஒக்கடுவின் தமிழ் ரீ மேக்கில் நடிக்கப் போகிறார்.


Click it and Unblock the Notifications











