சிவகார்த்திகேயன் படத்தில் ஷங்கர் மகன் பார்த்த வேலை.. அடுத்து அட்லி துணையுடன் ஹீரோ ஆகிறாரா?
சென்னை: இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் கார்த்தி நடித்த விருமன் படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் படத்திலும் அவர் தான் ஹீரோயின். இந்த ஆண்டு அதர்வா முரளியின் தம்பி ஆகாஷ் முரளி நடித்த நேசிப்பாயா மற்றும் தெலுங்கில் வெளியான பைரவம் உள்ளிட்ட படங்களில் அதிதி ஷங்கர் நடித்திருந்தார்.
இந்நிலையில், அவரைத் தொடர்ந்து அவரது சகோதரர் அர்ஜித் ஷங்கரும் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகப் போகிறார் என பேச்சுக்கள் அடிபட்டு வரும் நிலையில், அட்லியின் உதவி இயக்குநர் இயக்கும் புதிய படத்தின் மூலம் தான் அர்ஜித் ஹீரோவாகப் போவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

மேலும், விரைவில் வெளியாகவுள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி படத்திலும் அவர் பணியாற்றிய தகவல்களும் வெளியாகி உள்ளன.
ஷங்கருக்கு தொடர் சரிவு: குடும்பத்தில் தனது மூத்த மகள் ஐஸ்வர்யா திருமணம் சரியாக அமையாததது இயக்குநர் ஷங்கரை மனதளவில் ரொம்பவே பாதித்து விட்டது என்று தான் தெரிகிறது. சினிமாவில் முன்பை போல சின்சியராக அவர் இல்லாமல் போவதற்கு காரணமும் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் தான் என்றும் கூறுகின்றனர். மேலும், முன்பு போல ஷங்கருக்கு சரியான உதவி இயக்குநர்கள் இல்லாததும் ஒரு காரணம் என்றும் கூறுகின்றனர்.
மகளை தொடர்ந்து நடிகராகும் மகன்: மருத்துவத்துக்கு படிக்க வைத்த மகளே அதெல்லாம் ரொம்ப போர் என சினிமாவில் ஹீரோயினாக வேண்டும் என அடம்பிடித்து விருமன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த அதிதி ஷங்கருக்கு அடுத்தடுத்து டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்கும் வாய்ப்புகள் குறைந்து விட்டன. விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளிக்கு ஜோடியாக நடித்த படம் ஃபிளாப் ஆனது. அர்ஜுன் தாஸ் உடன் அவர் இணைந்து நடித்த ஒன்ஸ்மோர் திரைப்படம் பிசினஸ் ஆகாமல் வெகு காலமாக கிடப்பில் கிடக்கிறது. இந்நிலையில், அதிதி ஷங்கரை தொடர்ந்து அவரது சகோதரர் அர்ஜித் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளாராம்.
சிவகார்த்திகேயன் படத்தில் உதவி இயக்குநர்: அர்ஜித் ஷங்கர் முதலில் இயக்குநராகவே முடிவெடுத்துள்ளார். ஏ.ஆர். முருகதாஸிடம் உதவி இயக்குநராக ஷங்கர் சேர்த்துவிட சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தில் அவர் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. ஆனால், திடீரென அவருக்கு அதிதி ஷங்கர் போல நடிகராக வேண்டும் என்கிற ஆசை முளைத்த நிலையில், தற்போது ஹீரோவாக போகிறாராம்.
அட்லி உதவி இயக்குநர் இயக்கத்தில்: ஷங்கரின் உதவி இயக்குநராக இருந்த அட்லி ஷங்கரை விட தற்போது 100 கோடி ரூபாய் சம்பாதிக்கும் இயக்குநராக உருவெடுத்துள்ளார். அட்லியின் உதவி இயக்குநர் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் தான் ஷங்கர் மகன் ஹீரோவாக போகிறார் என்றும் பேஷன் ஸ்டூடியோஸ் அந்த படத்தை தயாரிக்கப் போவதாகவும், விரைவில் பூஜை போடப்பட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உருவாகுமா வேள்பாரி? கமல்ஹாசனை வைத்து ஷங்கர் இயக்கிய இந்தியன் 3 திரைப்படம் அப்படியே முடக்கப்பட்ட நிலையில், அந்த படம் ரிலீஸ் ஆகுமா? என்பதே சந்தேகம் தான் என்கின்றனர். இந்நிலையில், எப்படியாவது வேள்பாரி படத்தை இயக்கி மீண்டும் தன்னுடைய கெத்தை நிலை நாட்ட வேண்டும் என ஷங்கர் ஏகப்பட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அவருக்கு அந்த படத்துக்கு ஏற்ற நடிகர்களும் தயாரிப்பாளரும் கிடைத்து விட்டால் வேள்பாரியை தொடங்கி விடுவார்.


Click it and Unblock the Notifications











