சுத்தி பசங்கதான் இருக்கானுங்க.. எங்கே ப்ரோபோஸ்லாம் வரும்?.. விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் பாவம்தான்
சென்னை: விஜயகாந்த்தின் மகனான சண்முக பாண்டியன் பொன்ராம் இயக்கத்தில் நடித்திருக்கும் கொம்புசீவி திரைப்படம் நேற்ற் முன்தினம் வெளியாகி கலவையான விமர்சனத்தையே பெற்றிருக்கிறது. இரண்டு நாட்களில் மொத்தமே அப்பட்ம் 60 லட்சம் ரூபாயை மட்டுமே வசூலித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சண்முக பாண்டியன் கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று சோஷியல் மீடியாவில் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
கேப்டன், புரட்சி கலைஞர் என்று கொண்டாடப்பட்டவர் விஜயகாந்த். ரஜினிகாந்த், கமல்ஹாசன் சினிமாவில் பீக்கில் இருந்த காலகட்டத்தில் இவரும் நடிக்க வந்தார். ஆரம்பத்தில் ரொம்பவே கஷ்டத்தையும், விமர்சனத்தையும் சந்தித்த அவர்; தனது திறமையின் துணையால் ஹீரோவாக வளர்ந்து தனக்கென தனி மார்க்கெட்டை பிடித்தார். தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுத்து வந்த அவர்; அரசியலிலும் என்ட்ரி கொடுத்தார். சூழல் இப்படி இருக்க உடல்நல குறைவால் சில வருடங்களுக்கு முன்பு உயிரும் இழந்துவிட்டார் கேப்டன்.
சினிமாவில் மகன்: விஜயகாந்த் மறைவு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியது. அவர் மறைவைத் தொடர்ந்து அவரது மூத்த மகன் விஜய பிரபாகரன் அரசியலுக்கு செல்ல; இரண்டாவது மகன் சண்முக பாண்டியன் சினிமாவில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். பத்து வருடங்களுக்கு முன்பே அவர் ஹிரோவாக அறிமுகமாகியிருந்தாலும்; பெரிய வெற்றி எதுவும் கிடைக்கவில்லை. தந்தை உயிரிழந்ததை அடுத்து அவரது நீட்சியாக தான் இருக்க வேண்டும் என்ற முனைப்பில் உழைக்க ஆரம்பித்திருக்கிறார் இப்போது.

கொம்புசீவி: அந்தவகையில் கதைகளை கேட்டு வந்த அவர்; இந்த வருடம் ஜூன் மாதம் படைத்தலைவன் படத்தில் நடித்தார். அதன் ரிசல்ட் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. அடுத்ததாக பொன்ராம் இயக்கத்தில் கொம்புசீவி படத்தில் நடித்திருக்கிறார். இதில் சரத்குமார் முக்கியமான கேரக்டரை ஏற்க; யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். நேற்று முன்தினம் இப்படமானது தியேட்டர்களில்ரிலீஸானது. தேமுதிக தொண்டர்கள் உள்ளிட்ட பலர் ஆர்வத்துடன் படம் பார்க்க சென்றார்கள்.
சுமாரான வரவேற்புதான்: ஆனால் படம் ரசிகர்களை முழுவதுமாக திருப்திப்படுத்தவில்லை. அதேசமயம் சண்முக பாண்டியனின் நடிப்பு நன்றாக இருந்ததாகவும்; பல இடங்களில் விஜயகாந்த்தை பார்த்தது மாதிரியே இருக்கிறது. கண்டிப்பாக இவரும் தந்தை போன்று பெரிய நடிகராக வருவதற்கான அத்தனை தகுதிகளும் இருப்பதாக ஆரூடமும் கூறியிருக்கிறார்கள். இந்நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி ட்ரெண்டாகியிருக்கிறது.
சண்முக பாண்டியன் பேட்டி: அவர் அளித்த பேட்டியில், "நான் எந்தப் பெண்ணிடமும் காதலை சொன்னதும் இல்லை. எந்தப் பெண்ணும் என்னிடமும் காதலை சொன்னது இல்லை. என்னை சுற்றி எப்போதுமே பத்து பசங்க இருப்பானுங்க. இதில் எங்கிருந்து காதல் ப்ரோபோஸ் எல்லாம் வரும். நேரடியாக எனக்கு வந்தது கிடையாது. ஒருவேளை அவர்களிடம் சொல்லி சொல்ல சொல்லியிருக்கலாம். எனக்கு ஃபேஸ்புக் அக்கவுண்ட்டே கிடையாது. இன்ஸ்டாகிராமிலும் நான் ஆக்டிவ்வாக இருப்பது இல்லை. அதிலும் வரவில்லை" என்றார்.


Click it and Unblock the Notifications











