சாந்தனு.. ஹீரோவாய் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க, அவரது மகன் கலா பிரபு இயக்குனராக அறிமுகமாகிறார்.இதில் ஹீரோவாக அறிமுகமாகிறார் நடிகர்-இயக்குனர் பாக்கியராஜ்- முன்னாள் நடிகை பூர்ணிமா தம்பதியின்மகன் சாந்தனு. படத்தின் பெயர் சக்கரைக் கட்டி.பிரமாண்டத்துக்குப் பேர் போன தாணு, தனது மகனை அறிமுகப்படுத்தும் படம் என்பதால் இந்தப் படத்தின்பூஜையை ரொம்பவே கிராண்டாக நடத்தினார். பூஜைக்கான ஒவ்வொரு இன்விடேசனும் பல நூறு ரூபாய் பெறும்.ஏவி.எம். ஸ்டுடியோவில் நடந்த இந்தப் பூஜையில் கே.பாலசந்தர், விஜய், பிரகாஷ் ராஜ், பரத், ஏ.ஆர். ரஹ்மான்,இயக்குனர்கள் எஸ்.ஏ. சந்திரசேகர், எஸ்.ஜே. சூர்யா, ஏ.ஆர். முருகதாஸ், தரணி, அமீர், பேரரசு, ரமணாஉள்ளிட்ட விஐபிக்கள் நிறைந்திருந்தனர். அரசியலில் எதிரெதிர் திசையில் (திமுக, மதிமுக) நிற்கும் பாக்கியராஜும், தாணுவும் கலகலப்பாக இங்கு சுற்றிவந்தனர். ஹீரோவாக அறிமுகமாகும் சாந்தனுவை விட மிகவும் மகிழ்ச்சியாக விழாவில் வளைய வந்தது அவரதுதாயார் பூர்ணிமாவும், தங்கை சரண்யாவும் தான்.சரண்யா நடித்த படம் இன்னும் வெளியாவதற்குள் சாந்தனு ஹீரோவாகிவிட்டார்.இந்தப் படத்துக்கு இசை ஏ.ஆர். ரஹ்மான். மொட்டை போட்டு வளர்ந்த முடியுடன், ரொம்பவே குண்டுபோட்டிருந்த ரஹ்மான் வழக்கத்துக்கு மாறாக பத்திரிக்கையாளர்களுடன் கலகலப்பாகப் பேசிக் கொண்டிருந்தார்.தங்களிடம் மாட்டிக் கொண்ட ரஹ்மானை நிருபர்கள் குடைந்தெடுத்தனர். ஜாலி மூடில் இருந்ததால் அவரும்சளைக்காமல் பதில் தந்து கொண்டிருந்தார். சிவாஜி படத்துக்கு சாங்ஸ் எல்லாம் ஆச்சா என்று கேட்டபோது, 3 பாட்டு ரீ ரெக்கார்டிங் முடிஞ்சது. இன்னும் 3பாட்டுக்கு ரீ-ரெக்கார்டிங் நடந்துட்டு இருக்கு என்றார்.ஆல்பம் போட்டு ரொம்ப நாளாச்சு போலிருக்கே என்று கேட்டதற்கு, இதுவரை 75 சினிமாக்கள்ல ஒர்க்பண்ணிட்டேன். இடையில டைம் கிடைக்கும்போது தான் ஆல்பம் எல்லாம்.தமிழ் ரசிகர்கள் அதீதமான ரசனை கொண்டவர்கள். அவர்களுக்கு புதுசு புதுசா இருக்கணும். அதனால் என்னைமாதிரி ஆட்களுக்கு நிறைய சேலஞ்ச். ரொம்ப நல்லா பண்ணும்மா, நிறைய செலவாகுது. அதனால் தான் பெரியபட்ஜெட் படங்களையே நான் செலக்ட் செய்ய வேண்டியிருக்கு என்றார் சகஜமாக. படத்தை மிகப் பெரிய செலவில் பிரமாண்டமாய் உருவாக்கப் போகிறாராம் கலைப்புலி. ஹீரோயின் வேட்டையைமும்பை பக்கமாய் ஆரம்பித்திருக்கிறார்.இதுவும் ஒரு காதல் கதை தானாம்.. சாந்தனுவக்கும் எனக்கும் இது பெரிய அளவிலான எண்ட்ரியைக் கொடுக்கும்என்கிறார் இயக்குனர் கலாபிரபு.இதில் ஒரு விஷேசம் இயக்குனருக்கும், ஹீரோவுக்கும் வயது 25 பிளஸ் தானாம். பெரிய இடத்துப் பிள்ளைகள்.வாய்ப்பு ஈசியாகக் கிடைத்துவிட்டது. ஆனால், அதைக் காப்பாற்றிக் கொள்வது அவ்வளவு ஈசியல்ல என்பதைஉணர்ந்து கொண்டு வேலையில் இறங்கினால் சரி.

By Staff

கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க, அவரது மகன் கலா பிரபு இயக்குனராக அறிமுகமாகிறார்.

இதில் ஹீரோவாக அறிமுகமாகிறார் நடிகர்-இயக்குனர் பாக்கியராஜ்- முன்னாள் நடிகை பூர்ணிமா தம்பதியின்மகன் சாந்தனு. படத்தின் பெயர் சக்கரைக் கட்டி.

பிரமாண்டத்துக்குப் பேர் போன தாணு, தனது மகனை அறிமுகப்படுத்தும் படம் என்பதால் இந்தப் படத்தின்பூஜையை ரொம்பவே கிராண்டாக நடத்தினார். பூஜைக்கான ஒவ்வொரு இன்விடேசனும் பல நூறு ரூபாய் பெறும்.

ஏவி.எம். ஸ்டுடியோவில் நடந்த இந்தப் பூஜையில் கே.பாலசந்தர், விஜய், பிரகாஷ் ராஜ், பரத், ஏ.ஆர். ரஹ்மான்,இயக்குனர்கள் எஸ்.ஏ. சந்திரசேகர், எஸ்.ஜே. சூர்யா, ஏ.ஆர். முருகதாஸ், தரணி, அமீர், பேரரசு, ரமணாஉள்ளிட்ட விஐபிக்கள் நிறைந்திருந்தனர்.


அரசியலில் எதிரெதிர் திசையில் (திமுக, மதிமுக) நிற்கும் பாக்கியராஜும், தாணுவும் கலகலப்பாக இங்கு சுற்றிவந்தனர். ஹீரோவாக அறிமுகமாகும் சாந்தனுவை விட மிகவும் மகிழ்ச்சியாக விழாவில் வளைய வந்தது அவரதுதாயார் பூர்ணிமாவும், தங்கை சரண்யாவும் தான்.

சரண்யா நடித்த படம் இன்னும் வெளியாவதற்குள் சாந்தனு ஹீரோவாகிவிட்டார்.

இந்தப் படத்துக்கு இசை ஏ.ஆர். ரஹ்மான். மொட்டை போட்டு வளர்ந்த முடியுடன், ரொம்பவே குண்டுபோட்டிருந்த ரஹ்மான் வழக்கத்துக்கு மாறாக பத்திரிக்கையாளர்களுடன் கலகலப்பாகப் பேசிக் கொண்டிருந்தார்.

தங்களிடம் மாட்டிக் கொண்ட ரஹ்மானை நிருபர்கள் குடைந்தெடுத்தனர். ஜாலி மூடில் இருந்ததால் அவரும்சளைக்காமல் பதில் தந்து கொண்டிருந்தார்.


சிவாஜி படத்துக்கு சாங்ஸ் எல்லாம் ஆச்சா என்று கேட்டபோது, 3 பாட்டு ரீ ரெக்கார்டிங் முடிஞ்சது. இன்னும் 3பாட்டுக்கு ரீ-ரெக்கார்டிங் நடந்துட்டு இருக்கு என்றார்.

ஆல்பம் போட்டு ரொம்ப நாளாச்சு போலிருக்கே என்று கேட்டதற்கு, இதுவரை 75 சினிமாக்கள்ல ஒர்க்பண்ணிட்டேன். இடையில டைம் கிடைக்கும்போது தான் ஆல்பம் எல்லாம்.

தமிழ் ரசிகர்கள் அதீதமான ரசனை கொண்டவர்கள். அவர்களுக்கு புதுசு புதுசா இருக்கணும். அதனால் என்னைமாதிரி ஆட்களுக்கு நிறைய சேலஞ்ச். ரொம்ப நல்லா பண்ணும்மா, நிறைய செலவாகுது. அதனால் தான் பெரியபட்ஜெட் படங்களையே நான் செலக்ட் செய்ய வேண்டியிருக்கு என்றார் சகஜமாக.


படத்தை மிகப் பெரிய செலவில் பிரமாண்டமாய் உருவாக்கப் போகிறாராம் கலைப்புலி. ஹீரோயின் வேட்டையைமும்பை பக்கமாய் ஆரம்பித்திருக்கிறார்.

இதுவும் ஒரு காதல் கதை தானாம்.. சாந்தனுவக்கும் எனக்கும் இது பெரிய அளவிலான எண்ட்ரியைக் கொடுக்கும்என்கிறார் இயக்குனர் கலாபிரபு.

இதில் ஒரு விஷேசம் இயக்குனருக்கும், ஹீரோவுக்கும் வயது 25 பிளஸ் தானாம். பெரிய இடத்துப் பிள்ளைகள்.வாய்ப்பு ஈசியாகக் கிடைத்துவிட்டது. ஆனால், அதைக் காப்பாற்றிக் கொள்வது அவ்வளவு ஈசியல்ல என்பதைஉணர்ந்து கொண்டு வேலையில் இறங்கினால் சரி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X