ஒரு வெற்றி கிடைக்க 5600 நாள் ஆகிடுச்சு.. எனக்காக என் அப்பா நிறைய அழுதுருக்காரு.. சாந்தனு ஃபீலிங்!
சென்னை: இயக்குநர் பாக்கியராஜின் மகனான சாந்தனு வேட்டியை மடிச்சுக் கட்டு படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பின்னர் 2008ம் ஆண்டு இயக்குநர் கலா பிரபு இயக்கத்தில் வெளியான சக்கரகட்டி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படத்திலேயே ஏ.ஆர். ரஹ்மான் மியூசிக் வேதிகா மற்றும் இஷிதா ஷர்மா என இரண்டு ஹீரோயின்கள் என செம என்ட்ரி கொடுத்தார்.
அந்த படத்தில் இடம்பெற்ற டாக்ஸி டாக்ஸி, சின்னம்மா சிலக்கம்மா, மருதாணி என அனைத்து பாடல்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. ஆனால், படம் ஓடவே இல்லை. பாக்கியராஜ் மகனுக்கு நடிக்கவே தெரியவில்லை என கடுமையான விமர்சனங்கள் கிளம்பின. இந்நிலையில், அந்த படம் வெளியாகி இன்றுடன் 5600 நாட்கள் ஆகிவிட்டன. இப்போது தான் ப்ளூ ஸ்டார் படத்தின் மூலம் தனக்கு ஒரு வெற்றி கிடைத்திருப்பதாக சாந்தனு உருக்கமாக பேசியுள்ளார்.

பாக்கியராஜ் எழுதிய கடிதம்: ப்ளூ ஸ்டார் படம் வெற்றிப் பெற்ற நிலையில், நடந்த சக்சஸ் மீட் நிகழ்ச்சியில் உருக்கமாக பேசிய சாந்தனு தனது அப்பா பாக்கியராஜ் தனக்கு எழுதிய கடிதம் ஒன்றை மேடையில் வாசித்தார். சிறு வயதில் கிரிக்கெட் மீது சாந்தனுவுக்கு ஆர்வம் செல்லாமல் சினிமா பக்கம் அவனை திருப்ப விடுமுறை நாட்களாக பார்த்து வேட்டியை மடிச்சிக்கட்டு படத்தின் ஷூட்டிங்கை வைத்தேன். எத்தனையோ பேருக்கு சினிமாவில் சாதிக்க உதவிய என்னால் என் மகனுக்கு ஒரு பெரிய வெற்றியை கொடுக்க முடியவில்லை.

அப்பா ரொம்ப கஷ்டப்பட்டுட்டாரு: கடைசியாக தற்போது சிறுவயதில் அவன் விரும்பிய கிரிக்கெட்டை மையமாக வைத்து வெளியாகி உள்ள ப்ளூ ஸ்டார் படத்தில் அவனது நடிப்பு என்னை மெய் சிலிர்க்க வைத்து விட்டது. இந்த வெற்றியை என் மகனுக்கு தந்த பா. ரஞ்சித், படத்தின் இயக்குநர் ஜெயக்குமார் மற்றும் சக நடிகர்கள், டெக்னீஷியன் என அனைவருக்கும் நன்றி என பாக்கியராஜ் எழுதிய கடிதத்தை மேடையில் வாசித்து தனக்காக தனது தந்தை பல ஆண்டுகள் அழுது இருக்கிறார் என்பதை வெளிப்படையாக பேசியுள்ளார்.
5600 நாள் கஷ்டப்பட்டேன்: சக்கரகட்டி படம் ரிலீஸ் ஆகி 5600 நாள் கஷ்டப்பட்டேன் இப்படியொரு வெற்றிக் கிடைக்க என சாந்தனு பாக்கியராஜ். சுமார் 15 வருஷம் 4 மாசம் தொடர்ந்து சினிமாவில் போராடிய நிலையில், இப்படியொரு வெற்றி கிடைத்துள்ளது. இந்த படத்தை வெற்றிப் படமாக்கிய ரசிகர்களுக்கும், இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கொடுத்த விமர்சகர்களுக்கும் என் நன்றியை கூறிக் கொள்கிறேன் என ரொம்பவே எமோஷனலாகி பேசியிருந்தார். கடைசியாக விஜய்யின் மாஸ்டர் படத்தின் போது எமோஷனலாகி பேசிய சாந்தனு அந்த படம் வெளியான பின்னர் தனது போர்ஷன்கள் குறைக்கப்பட்ட நிலையில், அப்செட் ஆனார்.


Click it and Unblock the Notifications











