இந்த வெற்றிக்காக என்னோட பெற்றோர் தான் ஏங்குனாங்க.. சாந்தனு நெகிழ்ச்சி!
சென்னை: எனக்கு வெற்றி கிடைக்கலங்ற ஏக்கம் என்னோட அப்பா அம்மாவுக்கும் இருந்துச்சு. ப்ளூ ஸ்டார் திரைப்படத்தின் வெற்றி அவங்க முகத்துல சிரிப்ப வரவைத்து இருக்கிறது. இதை விட எனக்கு பெரிய பரிசு எதுவும் இல்ல என்று ப்ளூ ஸ்டார் படத்தின் வெற்றி விழாவில் நடிகர் சாந்தனு நெகிழ்ச்சயிக பேசினார்.
இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடெக்ஷன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் எஸ். ஜெயக்குமார் இயக்கத்தில் கடந்த வாரம் திரையரங்கில் வெளியாது திரைப்படம் ப்ளூ ஸ்டார். இதில்,அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன், பிரித்வி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கிரிக்கெட் விளையாட்டை வாழ்க்கையாகக் கருதும் இரு அணிகளுக்கு இடையே ஏற்படும் பிரச்சனை குறித்து பேசிய இத்திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பையும், நல்ல விமர்சனங்களையும் பெற்று வருகிறது.

ப்ளு ஸ்டார் வெற்றி விழா: இத்திரைப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய சாந்தனு,என்னுடைய ஒவ்வொரு படத்தின் மேடையிலும் வெற்றி விழாவில் சந்திப்போம் என்று சொல்லுவார்கள். ஆனால், இன்று என் வாழ்வில் அப்படியொரு தருணம் அமைந்துள்ளது. என்னால் இதை நம்பவே முடியவில்லை. இது மிகவும் எமோஷனலா இருக்கு. எனக்கு இந்த வெற்றியை கொடுத்த உங்களுக்கு மிக மிக நன்றி. என் வாழ்வில் இவ்வளவு பாசிடிவ் ரிவியூ கிடைத்ததில்லை. சக்கரக்கட்டி படத்திற்கு பிறகு, 15 வருடங்கள், 5,600 நாட்களுக்குப் பிறகு எனக்கு இந்த வெற்றி கிடைத்துள்ளது. எல்லாவற்றையும் தாண்டி என்னுடைய பெற்றோருக்கு இந்த வெற்றி பெறும் சந்தோஷத்தை கொடுத்தது. என்னைவிட 100 மடங்கு என்னுடைய அப்பா, அம்மா தான் இந்த வெற்றிக்காக ஏங்கினார்கள்.
15 வருட ஏக்கம்: 15 வருடம் எனக்கும், அப்பாவுக்கும் இந்த ஏக்கம் இருந்தது. அதனை எனது அப்பா கடிதமாக எழுதியிருந்தார். நான் நிறைய பேரை அறிமுகப்படுத்தி, அவர்களுக்கு வெற்றி கொடுத்திருக்கிறேன். ஆனால் என் பையனுக்கு வெற்றியை கொடுக்க முடியவில்லையே என என் அப்பா கண்ணீர்விட்டதாக அம்மா சொல்லியிருக்கிறார். அன்றைக்கு நான் யோசித்தேன். அந்த கண்ணீரை துடைக்கும் அளவுக்கு ஒரு வெற்றிகிடைத்தால் எனக்கு போதும், அது இன்று 'ப்ளூ ஸ்டார்’ மூலமாக கிடைத்துள்ளது. இந்த மகிழ்ச்சியை சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. இந்த நன்றியை நான் என்றைக்கும் மறக்கமாட்டேன் என்று நடிகர் சாந்தனு மிகவும் உருக்கமாக பேசினார்.


Click it and Unblock the Notifications











