சந்தனுவுக்கு விஜய் மீது இவ்வளவு பாசமா!!!
சென்னை: இயக்குனர் பாக்யராஜ் மகன் சாந்தனு விஜய்யின் தீவிர ரசிகர் என்று உங்களுக்கு தெரியுமா?
இயக்குனரும், நடிகருமான பாக்யராஜின் மகன் சாந்தனுவும் தனது பெற்றோர் வழியில் திரைத்துறையில் உள்ளார். சக்கரக்கட்டி படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமான அவர் தற்போது லவ் இன் ஹைதராபாத் என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார்.
அவரும், இனியாவும் சேர்ந்து நடித்த அம்மாவின் கைப்பேசி எதிர்பார்த்தபடி ஓடவில்லை. தற்போது அவர் கையில் 2 தமிழ் படங்கள் உள்ளது.

விஜய் ரசிகன் சாந்தனு
சாந்தனு இளைய தளபதி விஜய் ரசிகராம். தனக்கு பிடித்த ஹீரோவான விஜய்யின் ஸ்டைலான போட்டோக்களை சேகரித்து வருகிறாராம் ஜூனியர் பாக்யராஜ்.

விஜய் படத்தில் சாந்தனுவின் அம்மா
விஜய் நடிக்கும் ஜில்லா படத்தில் சாந்தனுவின் அம்மா பூர்ணிமா பாக்யராஜ் நடிக்கிறார்.

அமளி துமளியில் சாந்தனு
சாந்தனு தற்போது வாய்மை, அமளி துமளி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











